‘தாறுமாறாக உயர்ந்த ஹோட்டல் ரூம் வாடகை?’.. அதுக்கு காரணம் இதுதான்.. ஐபிஎல் அணிகளுக்கு ஏற்பட்ட புதிய தலைவலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

‘தாறுமாறாக உயர்ந்த ஹோட்டல் ரூம் வாடகை?’.. அதுக்கு காரணம் இதுதான்.. ஐபிஎல் அணிகளுக்கு ஏற்பட்ட புதிய தலைவலி..!

இந்தியாவில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் தொடரை பாதியிலேயே நிறுத்துவதாக பிசிசிஐ அறிவித்தது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக குறையாததால், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பிசிசிஐ முடிவு செய்தது.

IPL team facing real challenge in hotel booking as Dubai Expo clash

மேலும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. அதனால் அதற்குள் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் ஐபிஎல் அணிகளும் போட்டிகளுக்கு தயாராகி வருகின்றன.

IPL team facing real challenge in hotel booking as Dubai Expo clash

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹோட்டல் ரூம் புக் செய்வதில் ஐபிஎல் அணிகளுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி துபாய் எக்ஸ்போ (Dubai Expo) நடைபெற உள்ளது. இதற்காக துபாய்க்கு மக்கள் அதிகமாக வருவதால், ஹோட்டல் ரூம்களின் வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வழக்கமாக புக் செய்யும் ஹோட்டல்களுக்கு பதிலாக புதிய ஹோட்டல்களை புக் செய்ய பிசிசிஐ ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், ஜூலை 21-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்களுக்கு விமான டிக்கெட் புக் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் மொத்தமாக டிக்கெட் புக் செய்வதிலும் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச விமான சேவைக்கு தடை மற்றும் ஹோட்டல்களில் ரூம் புக் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்