ஐபிஎல் கேன்சல் ஆனது இந்திய அணிக்கு நல்லது!.. செம்ம வாய்ப்பு காத்திருக்கு!.. உண்மையை உடைத்த நியூசிலாந்து வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்குத் தான் சாதகம் என்று நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது.
அதைத் தொடர்ந்து, அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை இத்தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, தற்போது மும்பையில் அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்த பிறகு, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சென்று, பிறகு அங்கு 10 நாட்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விக்கெட் கீப்பர் சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் என்பவரையும் அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன் முதலாக இத்தொடர் நடைபெறுவதும், இங்கிலாந்து போன்ற நியூட்ரல் பிட்சில் இந்தியாவும், நியூசிலாந்து மோதுவதால் இரு அணிகளின் உண்மையான பலம் தெரியவரும் என்பதாலும், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், இத்தொடர் குறித்து பேசியுள்ள அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர், இந்தியாவில் எதிர்பாராதவிதமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே முடிந்துவிட்டது. ஒருவேளை ஐபிஎல் முழுமையாக நடந்திருந்தால், இந்திய அணிக்கு இந்த தொடரின் தயாரிப்பு பணிகளுக்கான கால அவகாசம் குறைவாக இருந்திருக்கும். ஆனால், இப்போது அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிட்டது. எனவே, இந்திய பவுலர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பார்கள்.
மேலும், இறுதிப் போட்டிக்கு முன்பு, நாங்கள் இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இதனால், எங்களுக்கு போதிய அனுபவம் கிடைக்கும். இது எங்களுக்கு இந்தியாவை விட கூடுதலாக சற்று சாதகமான அம்சமாகவும் இருக்கலாம். ஆனால், இந்தியா உலகின் நம்பர் 1 அணியாக நீண்ட காலம் இருக்கிறார்கள். அவர்கள் இங்கிலாந்து பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நல்லா விளையாடியும் டீம்ல இடம் கிடைக்கல... ரொம்ப கஷ்டமா இருக்கு’!.. இளம் வேகப்பந்து வீச்சாளர் வேதனை..!
- ‘ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சதும் கிழிஞ்ச ஷூவை பசையால் ஒட்டிதான் விளையாடுறோம்’!.. ரசிகர்களை உருக வைத்த சர்வதேச கிரிக்கெட் வீரரின் பதிவு..!
- சாஹா சொன்ன 'அந்த' வார்த்தை!.. அதிர்ந்துபோன சிஎஸ்கே நிர்வாகம்!.. ஐபிஎல்-இல் நடந்தது என்ன?.. மெல்ல மெல்ல அவிழும் முடிச்சுகள்!
- 'இனி அவர யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'!.. கோலி மீது எழும் 'அந்த' விமர்சனத்துக்கு... முன்னாள் பாகிஸ்தான் வீரர் பதிலடி!
- 'ஒவ்வொரு நொடியும்... Man vs Wild மாதிரி இருந்துச்சு'!.. பயோ பபுளை கொரோனா உடைத்தது எப்படி?.. எல்.பாலாஜியின் திக் திக் அனுபவம்!
- 'ஐபிஎல்' பற்றி வெளியான அசத்தல் 'அப்டேட்'.. "இனி இருக்குற 'மேட்ச்' எல்லாம் நடத்த இதான் நல்ல 'ஐடியா'.." 'பிசிசிஐ' அதிகாரி சொன்ன 'மாஸ்' தகவல்!!
- 'ஐபிஎல் continue ஆயிருந்தா...' நானே கெளம்பி வீட்டுக்கு போய்டலாம்னு தான் இருந்தேன்...' - 'ரகசியத்தை' வெளியிட்ட பெங்களூர் அணி வீரர்...!
- "என்ன இப்படி ஒரு முடிவ எடுத்து வெச்சு இருக்காங்க??.." 'கங்குலி'யை கடுப்பாக்கிய 'செய்தி'.. வெளியான தகவலால் 'பரபரப்பு'!!
- 'நான் சொல்ற மாதிரி செய்யுங்க... உங்களுக்கு இங்கிலாந்தில நான் ஐபிஎல் நடத்தி கொடுக்குறேன்'!.. பிசிசிஐ-யின் ஆசையை தூண்டிவிட்ட வாகன்!
- 'தோனி எனக்கு மட்டும் கத்து கொடுத்த 'அந்த' வித்தை!.. அத வச்சு இலங்கை தொடரில் வாய்ப்பு'!.. தீபக் சாஹரின் மாஸ்டர் ப்ளான்!