"மகன் IPL ஆடி நாடு முழுக்க ஃபேமஸ்.. அதுக்காக என் வேலைய விட முடியாது.." ஜூஸ் கடை நடத்தும் தந்தை.. பாராட்டும் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் வந்தாலே எந்தெந்த இளம் வீரர்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி, இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதை தான் பலரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
பும்ரா, ஹர்திக் பாண்டியா தொடங்கி வெங்கடேஷ் ஐயர் வரை பல இளம் வீரர்கள்; தங்களின் திறனை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி, இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தி வருகின்றனர்.
அதே போல, தற்போதைய ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், இந்தாண்டு டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவல், தற்போதே ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.
போட்டா 150 கி.மீ ஸ்பீடு தான்..
அந்த வகையில், தொடர்ந்து தன்னுடைய சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் ஒரு இளம் வீரர் தான் உம்ரான் மாலிக். கடந்த ஐபிஎல் சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்த உம்ரான் மாலிக்கை அந்த அணி, இந்த சீசனிலும் தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதுவரை ஹைதராபாத் அணி ஆடியுள்ள 6 போட்டிகளிலும், பந்து வீசி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறார்.
அனைத்து போட்டிகளிலும், 150 கி.மீ வேகத்தில் பந்து வீசியுள்ள உம்ரான், ஆரம்பத்தில் சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி இருந்தார். ஆனால், கடைசி சில போட்டிகளில் முக்கிய விக்கெட்டுகளை, தொடக் கூட முடியாத யார்க்கர் பந்துகளை வீசி, பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தார். உம்ரான் மாலிக்கின் வேகத்திற்கு வேண்டியே அவரை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என பல கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சின்ன வயசுலயே கிரிக்கெட் மேல ஆசை
இந்நிலையில், உம்ரான் மாலிக்கின் தந்தையான அப்துல் ரஷீத், மகனின் புகழ் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "அவரது பந்து வீச்சின் வேகம், இயல்பாகவே அவருக்கு அமைந்திருந்தது. இதற்கு வேண்டி பிரத்யேக பயிற்சி ஒன்றையும் மேற்கொள்ளவில்லை. Cosco டென்னிஸ் பந்து மூலம் உம்ரான் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவரின் கடின உழைப்பு தான் இன்று ஐபிஎல் வரை கொண்டு சேர்த்துள்ளது.
சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது உம்ரானுக்கு அதிக ஆர்வம் இருந்தது. பெரிய கிரிக்கெட் வீரர் ஆக வேண்டுமென்றும் அவர் அப்போதே முடிவு செய்து விட்டார். படிப்பிலும் சிறந்த முறையில் விளங்கிய உம்ரான், பள்ளி நேரத்திற்கு பின் கிரிக்கெட் ஆட சென்று விடுவார். கிரிக்கெட்டிற்கு வேண்டி உம்ரானுக்கு என்ன தேவைப்பட்டாலும் அது அவருக்கு கிடைத்திருக்க வேண்டும் என்பதில், நானும் எனது மனைவியும் உறுதியாக இருந்தோம்" என தெரிவித்தார்.
வேலைய விட முடியாது..
காஷ்மீர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் அப்துல் ரஷீத், "எனது மகன் இப்போது நாடு முழுவதும் பிரபலம் அடைந்து விட்டான் என்பது உண்மை தான். அதற்காக, நான் எனது வேலையை ஒன்றும் விடப் போவதில்லை" எனவும் தெரிவித்திருந்தார். இது பற்றி, ரசிகர்கள் நெகிழ்சியுடன் அவரை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
‘கல்யாணம் ஆகி 15 நாள்தான் ஆச்சு’.. நண்பன் பிறந்தநாளை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்..!
தொடர்புடைய செய்திகள்
- IPL மேட்சை இலவசமாக பார்க்க App.. சிக்கிய சிவகங்கை இளைஞர்.. அதிர வைத்த சம்பவம்..!
- "மீண்டும் மீண்டுமா??.." பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிச்சுக்கிட்டே நின்ன கோலி.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்
- "அவரு 'Sledging' பண்றதுல கில்லி.. அப்படியே என்கிட்ட வந்து.." கோலியுடன் நடந்த Face Off.. சூர்யகுமார் ஓபன் டாக்
- “டீம் கிட்ட ப்ளேயர்ஸ் லிஸ்ட் அனுப்பிட்டோம்”.. தீபக் சஹாருக்கு மாற்றுவீரர் யார்?.. CSK சிஇஓ முக்கிய அப்டேட்..!
- “அஸ்வின், சஹால் ஓவரை அவர் நல்லா அடிப்பார்”.. ஸ்கெட்ச் போட்டு விளையாடியும் மிஸ்ஸான வெற்றி.. KKR கோச் ஆதங்கம்..!
- “அப்பவே சொன்னேன்.. இப்படி ஏதாவது நடக்கும்னு”.. ஹர்திக் பாண்ட்வை முன்னாடியே எச்சரித்த பாகிஸ்தான் வீரர்..!
- "நம்ம 'Focus' ஃபுல்லா 'Hubby' மேல தான்.."மைதானத்தில் குழந்தையாக மாறி.. துள்ளிக் குதித்த கிரிக்கெட் வீரரின் மனைவி.. யாருங்க இது?
- “அவரை எதுக்கு முன்னாடியே அனுப்புனீங்க?”.. KKR கோச்சிடம் கோபமாக பேசிய ஸ்ரேயாஸ்.. கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு..!
- KKR பேட்ஸ்மேனுக்கும், RR பவுலருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்.. மேட்ச் ரொம்ப பரபரப்பாக இருந்திருக்கு போலயே..!
- ‘இவர் இப்படி கோவப்பட்டு பார்த்ததே இல்லயே’.. தமிழக வீரரை கடுமையாக சாடிய கேப்டன்.. அப்படி என்ன நடந்தது..?