'கோலி கோட்டை விட்டது 'இங்க' தான்!.. முக்கியமான மேட்ச்சில இப்படியா செய்றது!?'.. ஆர்சிபியை பந்தாடிய சன்ரைசர்ஸ்!.. அடுக்கடுக்கான சொதப்பல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றார். போட்டியின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
காயமடைந்த சாஹாவுக்கு பதில் கோஸ்வாமி அணியில் சேர்க்கப்பட்டார். பெங்களூர் அணியில் பெரும் அதிர்ச்சியாக இந்த நாக் அவுட் போட்டிக்கான அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. இது தான் விராட் கோலி செய்த முதல் தவறு.
முக்கியமான போட்டி எனும் நிலையில், அணியை பெரிய அளவில் மாற்றினால் வீரர்கள் குழப்பம் அடையக் கூடும். ஆனாலும், அணியை மாற்றிய கோலி அத்துடன் பேட்டிங் ஆர்டரையும் மாற்றினார். கடந்த சில போட்டிகளில் அணியில் இடம் பெறாத ஆரோன் பின்ச்சை தேர்வு செய்த அவர், தானே துவக்க வீரராக இறங்கினார். துவக்க வீரர் பின்ச் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார்.
பெங்களூர் அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்தது. துவக்க வீரர் கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 1 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த பின்ச் - ஏபி டிவில்லியர்ஸ் அணியை மீட்க போராடினர்.
ஆரோன் பின்ச் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் ஒரு முறை இந்த தொடரில் தனி ஆளாக அணியை மீட்க போராடினார். அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். அவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்காதது வியப்பாக இருந்தது.
பெங்களூர் அணியின் மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் மற்றும் பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 0, சிவம் துபே 8, வாஷிங்க்டன் சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி இரு ஓவர்களில் பேட்டிங் செய்த சைனி 9, சிராஜ் 10 ரன்கள் எடுத்து இருந்தனர்.
பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது மிகவும் குறைவான ஸ்கோர் தான். அபுதாபியில் இந்த இலக்கை ஹைதராபாத் அணி எளிதாக எட்டும் என்றே விமர்சகர்கள் கூறினர்.
பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததாகவும் சிலர் கூறினர். ஹைதரபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்கள் சாய்த்தார். நடராஜன் ஒரே ஓவரில் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டை சாய்த்து மிரட்டினார். அவர் 2 விக்கெட்கள் எடுத்தார். நதீம் 1 விக்கெட் எடுத்தார்.
இது போன்ற தவறுகளால், இரண்டாவதாக பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியில் எளிதாக வென்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்களும் குடும்பத்த பார்க்க வேண்டாமா!?... என்னங்க நீங்க இப்படி பண்றீங்க?'.. 'ரொம்ப மன உளைச்சலா இருக்கு!'.. விராட் வேதனை!
- ‘எல்லா வொர்க்கையும் ஓரமா வச்சுட்டு’...!!! 'ஹாலிடேக்கு எங்கே போவீங்க’...!!! ‘ரசிகரின் சுவாரஸ்ய கேள்விக்கு’... ‘தோனியின் அசத்தல் பதில்’...!!! ‘இதுதான் என் பர்ஸ்ட் சாய்ஸ்’...!!!
- 'இப்போ இதெல்லாம் தேவையா???'... 'வாழ்த்து சொல்லி கோலியை சீண்டிய இங்கிலாந்து'... 'கொந்தளித்துபோன ரசிகர்கள் கொடுத்த பதிலடி!!!'...
- ‘மோசமான சாதனையால் சோதனை’...!!! ‘தானாகவே வந்து வசமாக சிக்கிய வீரர்’...!!! ‘கட்டம் கட்ட காத்திருக்கும் பிசிசிஐ’...!!! 'இந்த நேரத்தில் இது தேவையா???
- 'சல்லி... சல்லியா... நொறுக்கிட்டாங்களே!'... 'நம்பி எறக்கிவிட்டதுக்கு... உங்களால என்ன பண்ண முடியுமோ... அத பண்ணீட்டீங்க!'.. தரமான சம்பவத்தால்... மனமுடைந்த பாண்டிங்!
- 'பழைய தோனியே இப்போ இருக்க தோனிய பாத்தா'... 'இததான் சொல்லிருப்பாரு?!!'... 'கண்டிப்பா அப்படி நடக்கும்'... 'அடித்து சொல்லும் பிரபல வீரர்!!!'...
- தம்பி நீ ‘முன்னாடி’ போ.. ‘சோகமாக’ நடந்து வந்த ராகுல்.. ரோஹித் செஞ்ச ‘தரமான’ செயல்..!
- ஐபிஎல் மேட்ச்சுலேயே ஒண்ணும் சாதிக்கல...!!! மோசமாக விளையாடும் இவர் எப்படி...!!! ஆஸ்திரேலியாவில விளையாடுவாரு???...
- 'பவுலிங்'னா இப்படி இருக்கணும்... டபுள் விக்கெட் மெய்டன்!.. 'சும்மா... காட்டு காட்டுனு காட்டிட்டாரு!'.. பும்ராவின் மேஜிக் ஃபார்முலா 'இது' தான்!
- 'எத்தன தடவ?!!'... 'விட்டு விட்டு பிடித்த 'செம்ம' கேட்ச்சால்'... 'சீரியஸான போட்டியில் சிரிப்பு காட்டிய மும்பை வீரர்!!!'...