'என்னது மேட்ச்ல நடராஜன் இல்லயா?.. ஏன்... எதுக்கு டீம்ல இருந்து தூக்குனீங்க?'.. கொந்தளித்த ரசிகர்கள்!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். நன்றாக விளையாடியும் அவர் ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

ஹைதராபாத் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவராக நடராஜன் இருந்தார். கடந்த போட்டியில் கூட நடராஜன் நன்றாக பவுலிங் செய்தார். ஸ்பின் பவுலர்கள் அதிக ரன்களை கொடுத்த போது நடராஜனை அழைத்துதான் வார்னர் ரன்களை கட்டுபடுத்த சொன்னார். 

முதல் போட்டியிலும், இரண்டாம் போட்டியிலும் நடராஜன் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார். எனினும், இன்று நடராஜன் ஒதுக்கப்பட்டு இருக்கிறார். வார்னரின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று கேள்விகள் எழுந்துள்ளன. 

நடராஜனுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் வார்னர் அவரை நீக்கி இருக்கலாம் என்கிறார்கள். சென்னை பிட்சில் ஸ்லோ பால் வீச வேண்டும். அதிகமாக கட்டர்களை வீச வேண்டும். கடந்த போட்டியில் கூட நடராஜனிடம் கட்டர்களை வீசும்படி வார்னர் கூறினார்.  ஆனால், சென்னை பிட்ச் நடராஜனுக்கு பெரிதாக ஒத்துழைக்கவில்லை.

பவுலிங் ரீதியாக நடராஜன் தவறு எதுவும் செய்யவில்லை. அவரின் லைன் மற்றும் லென்த் நன்றாகவே இருந்தது. இருப்பினும் புதிய பவுலர்களுடன் இறங்க ஆசைப்பட்டு நடராஜனை வார்னர் நீக்கி இருக்கலாம்.

இதுகுறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் இயக்குநர் டாம் மூடி, "நடராஜனுக்கு work load management-க்காக தான் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவர் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்து வரும் போட்டிகளில் அவர் நிச்சயம் விளையாடுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், நடராஜன் இல்லாமல் ஹைதராபாத் அணியின் பவுலிங் ஆர்டர் கொஞ்சம் வலிமையின்றியே காணப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்