'தாங்கவே முடியல... அவ்ளோ வேதனையா இருக்கு'!.. எல்லாத்துக்கும் காரணம் 'இது' தான்!.. மனமுடைந்த வார்னர்!.. ஜெயிக்க வேண்டிய மேட்ச் போச்சு!.. எப்படி நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு ராயல் சேகஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு டிவில்லியர்ஸ், தேவ்தட் படிக்கல் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தாலும், விராட் கோலி 33 ரன்களும், கடைசி ஓவர் தாக்குபிடித்த கிளன் மேக்ஸ்வெல் 41 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 149 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரசீத் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான சஹா 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அதன் பின்னர், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - மணிஷ் பாண்டே கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி மெதுவாக ரன் சேர்த்தது.

டேவிட் வார்னர் - மணிஷ் பாண்டே கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்திருந்த போது டேவிட் வார்னர் (54) ஜேமிசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து போட்டியின் 17வது ஓவரை வீசிய சபாஷ் அகமத் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை தலைகீழாக மாற்றினார். இதனால் கடைசி ஒரு ஓவருக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஹைதராபாத் அணிக்கு ஏற்பட்டது.

போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் ஒரு நோ பால் வீசினாலும், மற்ற பந்துகளை ஹர்ஷல் பட்டேல் மிக துல்லியமாக வீசியதன் மூலம் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

பெங்களூர் அணி சார்பில் சபாஷ் அகமத் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த நிலையில், பெங்களூர் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய டேவிட் வார்னர், இந்த தோல்வி வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேவிட் வார்னர் பேசுகையில், "முதல் இன்னிங்ஸில் எங்கள் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு பெங்களூர் அணியை கட்டுப்படுத்தினர். மேக்ஸ்வெல் மிக சிறப்பாக விளையாடினார். நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம், ஈசியாக கிடைக்க வேண்டிய வெற்றியையும் தவறவிட்டுவிட்டோம்.

எங்களது சில ஷாட்கள் மிக மோசமாக இருந்தது, நாங்கள் இப்படி விளையாட கூடாது. இந்த தோல்வியும், நாங்கள் விளையாடிய விதமும் மிகுந்த வேதனையை கொடுக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் தவறுகளை சரி செய்து கொள்வோம். நாங்கள் அடுத்த மூன்று போட்டிகள் இந்த மைதானத்தில் விளையாட வேண்டியுள்ளதால் நிச்சயம் பேட்டிங்கில் முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்