பறிபோனது டேவிட் வார்னரின் கேப்டன் பதவி!.. ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடி முடிவு!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடர் தோல்விகளை அடுத்து அந்த அணி நிர்வாகம் டேவிட் வார்னரை கேப்டன்சியில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் படு சொதப்பல் செய்துவருகிறது.

இந்நிலையில், டேவிட் வார்னருக்கு பதிலாக இனி கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என ஐதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சிறப்பாக ஆடி ப்ளே ஆஃப் வரை சென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்த ஆண்டு மிக மோசமாக அமைந்ததுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதனால் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னரை நீக்கிவிட்டு நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வந்தது. இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அதை நிறைவேற்றியுள்ளது. நாளை நடைபெறும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முதல் இந்த மாற்றம் ஏற்படவுள்ளது. 

ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் கடந்த 2016ம் ஆண்டு ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரின் கேப்டன்சியில் அந்த ஆண்டே ஐதராபாத் அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. கேன் வில்லியம்சனும் ஐதராபாத் அணியை கடந்த 2018ம் ஆண்டு வழிநடத்தியுள்ளார். அவரின் கேப்டன்சியில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டி வரை சென்று வெளியேறியது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்த சீசனில் இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. இனி வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் ஐதராபாத் அணி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதி ஆகும். ஒரு ப்ளேயராக டேவிட் வார்னர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அவரும் அணியின் ப்ளேயிங் 11ல் தொடர்ந்து இடம் பெறுவார் என கூறப்படுகிறது. இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் 193 ரன்கள் எடுத்துள்ளார்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்