'fire mode-ல் இருந்த சஞ்சு சாம்சனுக்கு 'இந்த' ஒரு weakness இருந்துச்சு'!.. சொடுக்கு போடும் நேரத்தில்... பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அர்ஷ்தீப்!.. பரபரப்பு பின்னணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஃபுல் ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனை கடைசி பந்தில் புத்திசாலிதனமாக வியூகம் அமைத்து அவுட்டாக்கியது குறித்து அர்ஷ்தீப் சிங் பேசியுள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இந்நிலையில் இந்த வெற்றி மிக முக்கிய காரணமாக அமைந்த பஞ்சாப் கிங்ஸ் பவுலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது.

அதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாமசன் 119 ரன்கள் அடித்து ஒற்றை ஆளாக போராடியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. 

222 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் (0), மன்னன் வோஹ்ரா (12) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் அணியை மீட்டார். எனினும், அவருக்கு நான் ஸ்ட்ரைக் எண்டில் இருந்த பட்லர், ஷிவம் தூபே, ரியான் பராக், ராகுல் தேவட்டியா ஆகியோர் கைக்கொடுக்கவில்லை. 

அணி வீரர்கள் சரிந்தாலும் ஒற்றை ஆளாக போராடிய சஞ்சு 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். இதனால் கடைசி ஓவர் வரை யார் வெற்றி பெறுவார் என்ற பதற்றம் இருந்து வந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 13 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இதில் முதல் 5 பந்துகளில் 8 ரன்களை சாம்சன் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி பந்தை தூக்கி அடித்து சாம்சன் கேட்ச்சானதால் 4 ரன்கள் வித்தியாச்த்தில் ராஜஸ்தான் தோவ்லியடைந்தது. 

நல்ல ஃபார்மில் இருந்த சாம்சனை அவுட்டாக்க கடைசி ஓவரில் மட்டும் 3 வைடு ரேஞ்ச் பந்துகளை அர்ஷ்தீப் பட்டேல் போட்டார். இதில் முதல் 2 பந்துகளில் சிங்கிள் மற்றும் டாட் பாலான நிலையில், 3வது வைட் ரேஞ்சில் சாம்சன் சிக்கினார். 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அர்ஷ்தீப், சாம்சனுக்கு களம் நன்கு பழகிவிட்டது. எனவே, அவருக்கு எதிராக வைட் ரேஞ்ச் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீச நினைத்தேன். ஏனெனில், அந்த பந்தை தூக்கி அடிப்பது மிக கஷ்டம். அதில் சாம்சன் சிக்கிக்கொண்டார் என தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடர் மிகப்பெரிய ஒன்றாகும். இங்கு எந்த அணியின் ஆட்டத்தையும் நிர்ணயிக்கமுடியாது. நான் நேற்றைய போட்டியில் நடந்த சம்பவத்திற்காக எதையும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. நான் எனக்கு நானே அறிவுரை கூறி மீண்டு வந்தேன். ரொம்பவும் யோசிக்காமல் மிக எளிமையான விஷயங்களை தான் செய்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்