"அடுத்த தோனியா...? அதுக்கெல்லாம் அவசியமில்ல...!!!" - 'கோபத்தில் கொதிச்ச பிரபல வீரர்!'... "என்னங்க இது... பாராட்டுனது ஒரு குத்தமா???"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு பின் சஞ்சு சாம்சனை பாராட்டியுள்ள எம்பி சசி தரூர் மீது கவுதம் கம்பீர் பாய்ந்துள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திவாதியா என எல்லோரும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கடைசி கட்டத்தில் வந்த ராகுல் திவாதியா போட்டியின் போக்கையே மாற்றினார். நேற்றைய போட்டியில் ஸ்மித் அவுட்டான போது கூட சஞ்சு சாம்ஸன் அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் ஸ்மித் அரை சதம் அடிக்க, இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம்.

கடந்த ஒரு வருடமாக ஐபிஎல் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வந்த சஞ்சு சாம்சன் கடந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னைக்கு எதிரான போட்டியில் வெறும் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் மட்டும் அவர் 9 சிக்ஸ் அடித்தார். இதையடுத்து தற்போது சஞ்சு சாம்சனை கிரிக்கெட் ரசிகர்கள் தோனியோடு ஒப்பிட்டு வருகிறார்கள். அடுத்த தோனி இவர்தான் எனவும், நன்றாக பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்கிறார், இந்திய அணியில் இவரை எடுக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ள டிவீட்டில், "சஞ்சு சாம்சன் இப்படி அதிரடியாக ஆடுவார் என எனக்கு முன்பே தெரியும். பல வருடமாக அவரை எனக்கு தெரியும். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது என 10 வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன். நீதான் அடுத்த தோனி என அவருக்கு 14 வயது இருக்கும் போதே சொல்லி இருக்கிறேன். அந்த நாள் தற்போது வந்துவிட்டது. அவரின் கடந்த 2 போட்டிகளே அதற்கு சாட்சி.

ஒரு உலகத்தரமான வீரர் கிரிக்கெட் உலகிற்கு வந்துவிட்டார் என அவருடைய ஆட்டத்தை பார்த்தாலே தெரியும்" எனக் கூறியுள்ளார். இதையடுத்து தரூரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிவிட்டுள்ள டிவீட்டில், "சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அவர் இந்திய கிரிக்கெட்டின் முதல் சஞ்சு சாம்சன். அவரை வேறு யாருடனும் ஒப்பிட கூடாது" எனக் கூறியுள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்