ஸ்கிரீன்ல மட்டும் போட்டி இல்ல... 'ஐபிஎல்'லயும் தான்!.. ஷாருக் கானுக்கு டஃப் கொடுக்க... 9-வது அணியை வாங்க துடிக்கும் பிரபல 'பாலிவுட்' நடிகர்!.. கடும் போட்டியில்... வெல்லப்போவது யார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ அறிவிக்க உள்ள புதிய ஐபிஎல் அணியை வாங்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கானும் அப்போட்டியில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
2020 ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது பிசிசிஐ. இதுவரை இல்லாத ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. பார்வையாளர்கள் கடந்த சீசனை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
இதை வைத்து ஐபிஎல் தொடரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த துடித்து வருகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி. அதன்படி எட்டு ஐபிஎல் அணிகளுடன் கூடுதலாக புதிய ஐபிஎல் அணி ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது பிசிசிஐ.
அதற்கான வேலைகளில் கங்குலி இறங்கி உள்ளார். ஒரு அணி மட்டும் தானா? இரண்டு அணியா? என்பது தான் குழப்பமே என்கிறார்கள் பிசிசிஐ வட்டாரத்தை சேர்ந்த சிலர். அந்த புதிய ஒன்பதாவது அணி குறித்த பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
பலரும் அஹமதாபாத்தை சேர்ந்த அணியாகவே அந்த புதிய அணி இருக்கும் என அடித்துக் கூறுகின்றனர். அப்படி என்றால் அது குஜராத் மாநிலத்தை சேர்ந்த அணியாக இருக்கும்.
இதற்கிடையே, அந்த அணியை யார் வாங்கப் போகிறார்கள் என்பது பற்றியும் செய்திகள் பரவி வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் பார்க்க வந்த மோகன் லால் புதிய ஐபிஎல் அணியை பற்றி அறியவே நேரில் சென்றார் என தகவல் வலம் வருகிறது.
மோகன் லால் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வமாக இருக்கிறார் என்றால் அது முன்பு கேரளாவை மையமாக வைத்து கொச்சி டஸ்கர்ஸ் என்ற அணி இருந்தது போல, புதிய அணி கேரளாவுக்கான அணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது புதிய தகவலாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் புதிய ஐபிஎல் அணியை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் எனும் நடிகர்கள் கிரிக்கெட் தொடரில் ஒரு அணிக்கு உரிமையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், ஜுஹி சாவ்லா இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நடத்தி வருகின்றனர். ப்ரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நடத்தி வருகிறார். அதே போல, தானும் ஒரு அணியை வாங்க வேண்டும் என சல்மான் கான் நினைக்கலாம் என்கிறார்கள்.
நடிகர்களை விட பெரு நிறுவன முதலாளிகள் ஐபிஎல் அணிகளை வாங்க சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அஹமதாபாத்தை மையமாக ஐபிஎல் அணி உருவானால் நிச்சயம் குஜராத்தை சேர்ந்த பிரபல நிறுவனமான அதானி குழுமம் அதை வாங்கும் என்கிறார்கள்.
பலரும் கூறுவதை வைத்துப் பார்த்தால் குஜராத்தை மையமாக வைத்தே புதிய ஐபிஎல் அணி உருவாகக் கூடும். குஜராத் லயன்ஸ் என்ற அணி இரு ஆண்டுகள் செயல்பட்ட போது அதற்கென்று ரசிகர்கள் கூட்டம் இருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் கப் ஜெயிச்ச கையோட ‘மும்பை இந்தியன்ஸ்’ டிரஸ் போட்டே ‘பாகிஸ்தானுக்கு’ விளையாட போன வீரர்.. வைரலாகும் போட்டோ..!
- 'இப்டி எல்லாம் செய்யலாமா’...??? ‘ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட்டால்’... ‘வெடித்துள்ள சர்ச்சை’... ‘வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’... ‘பழைய பகைதான் காரணமா’????
- 'ஆஹா... 'இது'க்குள்ள இவ்ளோ 'அர்த்தம்' ஒளிஞ்சிருக்கா!'.. அன்றே சொன்ன தல தோனி!.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்!.. என்ன நடந்தது?
- ஓ...! 'டெஸ்ட் மேட்ச்ல அவர் விளையாடலையா...' 'அப்போ ஆஸ்திரேலியா கன்ஃபார்மா ஜெயிச்சிடும்...' - மைக்கேல் வாகன் ட்வீட்...!
- அப்போ தோனி எடுத்த ‘முடிவை’ ஏன் கோலி எடுக்கல? டீம் மேல அவருக்கு அக்கறை இல்லையா?.. ‘கம்பேர்’ பண்ணி தாக்கும் ரசிகர்கள்..!
- 'டெல்லி கேபிடல்ஸ் புடி புடி'... ரோஹித் 'பலே' ஸ்கெட்ச்... ஓவருக்கு ஓவர் 'புது' ப்ளான்... 'இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லையே'... வாயடைத்து போன வீரர்கள்!
- ‘சந்தேகமே வேணாம்’... ‘கோலிக்கு பதில் அவர கேப்டனா நியமிங்க’... ‘வலுக்கும் ஆதரவு குரல்கள்’...!!!
- 'ஒரே தவற எவ்ளோ முறை செய்வீங்க ஸ்ரேயாஸ்?.. இப்படியா சொதப்புறது?'.. தோல்விக்கு 'இது' தான் காரணம்!.. டெல்லி அணி கோப்பையை கோட்டை விட்டது எப்படி?
- ‘இளைஞர்களின் வழிகாட்டி அவர்’... ‘தமிழக வீரர் நடராஜனை’... ‘பாராட்டி, வாழ்த்திய தெலுங்கானா ஆளுநர்’...!!!
- அடுத்த ஐபிஎல் சீசனில் களமிறங்கும் ‘புதிய’ அணி?.. அப்போ ‘கேப்டன்’ யாரா இருக்கும்..?