“அப்படியே சின்ன வயசு கோலிய பாக்குற மாதிரியே இருக்கு!” - அதிரடியான’ ஆட்டத்தால், இளம் வீரரை.. புகழ்ந்து தள்ளிய டூ பிளெசிஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐ.பி.எல். தொடரில் நேற்றைய 55வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதிக்கொண்டன.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி,  பந்து வீச முடிவு செய்த நிலையில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து எளிதாக இலக்கை அடைந்து வென்றது. சென்னை அணியை பொருத்தவ்ரை ருத்துராஜ் ஆட்டமிழக்காமல் விளையாடி 62 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இதுபற்றி டூ பிளெசிஸ் அளித்த பேட்டியில், “இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் தரக்கூடியதாக இருந்தாலும் நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம். எங்கள் அணியின் இளம் வீரரான, ருத்துராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போலவே செயல்படுகிறார்.

நெருக்கடியான ஒரு நேரத்தில், களத்தில் நின்று அவர் ஆடுவதாக எனக்கு தோன்றுகிறது. இதுபோன்ற தகுதிகள்தான் இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு தேவையாக உள்ளது.” என கூறினார். மேலும் தனக்குள் இன்னும் கிரிக்கெட் பொதிந்து கிடப்பதாகவும், நிச்சயமாக அடுத்த 5 ஆண்டுகள் விளையாடுவேன் என்றும் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்