'இவங்களுக்கு மேட்ச்ல விக்கெட் விழுதோ இல்லயோ... டீம்ல நல்லா விழுது'!.. பொட்டி படுக்கை எடுத்துட்டு ஊருக்கு கிளம்பும் முக்கிய வீரர்!.. என்ன ஆகப் போகுதோ!?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டி கடைசி பால் வரை விறுவிறுப்பாக சென்றது. பஞ்சாப் 222 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரியான் பராக், கே. எல் ராகுல் என்று நேற்று கிட்டத்தட்ட முக்கியமான இளம் இந்திய வீரர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினார்கள். ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் நேற்று ராஜஸ்தான் அணிக்காக சரியாக ஆடவில்லை.
ராஜஸ்தான் அணிக்காக நேற்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் 1 ஓவர் மட்டுமே வீசி 12 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. அதே சமயம், நேற்று பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று லாங் ஆனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் கேட்ச் ஒன்றையும் மிஸ் செய்தார். அதன்பின் மீண்டும் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை ஓடி வந்து பிடித்தார். லாங் ஆன் திசையில் வந்த பந்தை வேகமாக ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் பிடித்தார்.
இந்த பந்தை பிடித்த போதே, முகத்தை சுளித்து, கையை பிடித்துக்கொண்டே பென் ஸ்டோக்ஸ் எழுந்தார். இவரின் கையில் அப்போதே காயம் ஏற்பட்டது. உள் காயம் ஏற்பட்டதால் பெரிதாக வலியை காட்டிக்கொள்ளாமல் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங் செய்தார்.
இந்த நிலையில், நேற்று போட்டிக்கு பின்பும் அவருக்கு வலி அதிகம் இருந்தது. இன்று காலையும் வலி நீடித்ததால் கையில் இவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த ஸ்கேனில் இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கையில் சின்ன எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் ஏற்கனவே காயம் அடைந்துள்ளார். இவர் முழுமையாக அணியில் இணைய சில நாட்கள் ஆகும். தற்போது இன்னொரு முக்கியமான வீரர் ஸ்டோக்ஸும் காயம் அடைந்து வெளியேறி இருப்பது ராஜஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சின்னப்பசங்க தான... இறங்கி செஞ்சிடாம்லனு நெனச்சீங்களா'!?.. 'விக்கெட் பத்திரம்'!!.. ஜாம்பவான்களை நடுங்க வைத்த 4 இளம் வீரர்கள்!
- ‘புது ஜெர்சி, புது பெயர்.. ஆனா இது மட்டும் மாறவே இல்ல’!.. வெற்றிக்கு பின் ப்ரீத்தி ஜிந்தா சொன்ன ‘அந்த’ விஷயம்..!
- 'fire mode-ல் இருந்த சஞ்சு சாம்சனுக்கு 'இந்த' ஒரு weakness இருந்துச்சு'!.. சொடுக்கு போடும் நேரத்தில்... பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அர்ஷ்தீப்!.. பரபரப்பு பின்னணி!
- VIDEO: ‘என்ன எடுத்து கொடுப்பாருன்னு பாத்தா பாக்கெட்ல போட்டாரு’!.. மறந்துபோய் சஞ்சு சாம்சன் செஞ்ச செயல்..!
- ‘கடைசி ஓவர்ல சஞ்சு சாம்சன் ஏன் அப்டி செஞ்சாரு?’.. கடுப்பாகி திரும்பி ஓடிய மோரிஸ்.. சர்ச்சைக்கு விளக்கமளித்த சங்ககாரா..!
- ‘என்னா நடிப்பு.. மிரண்டு போய்ட்டேன்’!.. ‘வீடியோ காலில் பேச வைத்த நட்டு’.. யோகி பாபுவை புகழ்ந்து தள்ளிய ‘கிரிக்கெட்’ வீரர்கள்..!
- 'சீக்கிரம் சொல்லுங்க... டிஆர்எஸ் கேட்கலாமா வேண்டாமா?.. அய்யோ யாராவது சொல்லுங்களேன்'!.. வாய்ப்பை கோட்டைவிட்ட சாம்சன்!.. மேட்ச்சே மாறி இருக்கும்!!
- 'ஆத்தாடி!.. அடுத்த மேட்ச் நம்ம கூட தான் ஆடப் போறாங்களா'!?.. தீபக் ஹூடாவின் வெறித்தனத்தை... நய்யாண்டி செய்த சிஎஸ்கே!.. என்ன ப்ளானா இருக்கும்?
- 'அப்புறம் என்ன பா... சிக்ஸ்னு அறிவிச்சுடலாம்ல'!.. 'யோவ்... இருய்யா... பவுண்டரி லைன்ல என்னமோ நடக்குது'!.. ஒரு நொடி ஆடிப்போன 3rd அம்பயர்!.. என்ன ஃபீல்டிங் மேன் இது!?
- 'அவர டார்ச்சர் பண்ண முடியாது!.. நடக்குறது நடக்கட்டும்!.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ'!?.. பயங்கர நெருக்கடியில் ராஜஸ்தான் அணி!.. என்ன சிக்கல்?