'எப்படி பால் போட்டாலும் கேகேஆர் அடிக்குறாங்க'!.. 'இதுல மிஸ் ஃபீல்டிங்... மோசமான பவுலிங் வேற'... களத்திலேயே பஞ்சாயத்து செய்த ரோகித்!.. அதுக்கு அப்புறம் தான் சரவெடி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக பும்ரா பவுலிங் செய்த இரண்டு ஓவர்கள்தான் மிக முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்தியது.

கொல்கத்தாவிற்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் நேற்று மும்பை திரில் வெற்றிபெற்றது. வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட போட்டியில், கடைசி 4 ஓவர்களில் ஏற்பட்ட டிவிஸ்ட் காரணமாக மும்பை வென்றது.

மும்பை அணியில் ராகுல் சாகர் எடுத்த 4 விக்கெட், க்ருணால் பாண்டியா எடுத்த ஒரு விக்கெட்தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது. க்ருணால் பாண்டியா ஓவரில் ரசல் இரண்டு முறை அவுட் ஆகாமல் தப்பித்தார். முதல் முறை ரசல் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் அதை மிஸ் செய்தார். அதன்பின் மீண்டும் அதே ஓவரில் ரசல் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் பும்ரா மிஸ் செய்தார்.

இந்த கேட்சை மிஸ் செய்த பும்ரா கடும் விரக்தியில் இருந்தார். ரசலின் கேட்ச்சை போய் விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் பும்ரா இருந்தார். அதேபோல், பும்ரா வீசிய 17வது ஓவரும் கொஞ்சம் மோசமாக இருந்தது. 15, 16 ஓவர்களில் மும்பை ரன்களை கட்டுப்படுத்திய நிலையில் 17வது ஓவரில் பும்ரா நோ பால் வீசினார். அடுத்த பந்தில் பவுண்டரியும் கொடுத்தார். 

இந்த ஓவரில் 8 ரன்கள் சென்ற நிலையில், பும்ரா மிகவும் வருத்தமாக காணப்பட்டார். ஃபீல்டிங் நிற்கும் போது தரையை காலை தட்டிய படியே மிகவும் வருத்தமாக காணப்பட்டார். இவர் பவுலிங் செய்த விதத்தை பார்த்த ரோஹித்து, "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று நேராக சென்று கேட்டு நீண்ட நேரம் அட்வைஸ் கொடுத்தார். 

ரோஹித் கொடுத்த அட்வைசுக்கு பின் மனம் மாறிய பும்ரா அடுத்த ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார். 19வது ஓவரில் பும்ரா வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். உண்மையில், இந்த ஓவர்தான் திருப்பு முனையாக இருந்தது. இந்த ஓவரில் ரன் செல்வதை பும்ரா கட்டுப்படுத்தினார். இதுதான் கேம் சேஞ்சராக அமைந்தது. 

ரோஹித் சர்மா நேற்று பும்ரா தொடங்கி பவுலர்கள் எல்லோரையும் கையாண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. பவுலர்களை சரியான நேரத்தில் அனுப்பியது. அவர்களுக்கு சரியான அறிவுரைகளை வழங்கியது என்று ரோஹித் சிறப்பாக செயல்பட்டார். நேற்று பும்ரா மீண்டும் பார்மிற்கு வந்து, நல்ல ஓவர் வீசவும் ரோஹித்தே காரணமாக இருந்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்