'எத்தனை வருஷத்து பகை தெரியுமா?.. மொத்தமா பழி தீர்த்துட்டாரு'!.. சிராஜ் பவுலிங் குறித்து... கோலி வெளியிட்ட அதிரவைக்கும் சீக்ரெட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் வரலாற்றில் தனது மிக சிறப்பான ஓவரை நேற்று முகமது சிராஜ் பெங்களூர் அணிக்காக வீசினார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்றது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி 20 ஓவருக்கு 204/3 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டும் எடுத்து கொல்கத்தா தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் 2 ஓவர்களை சிராஜ் சரியாக வீசவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக பவுலிங் செய்து வந்த சிராஜ், நேற்று நடந்த போட்டியில் முதல் 2 ஓவர்களில் கொஞ்சம் திணறினார். சரியான லைன் மற்றும் லென்த் கிடைக்காமல் சிராஜ் கொஞ்சம் கஷ்டப்பட்டார். 

இவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் மொத்தம் 16 ரன்கள் கொடுத்தார். ஒரு ஓவருக்கு 8 ரன்கள் வீதம் கொடுத்தார். விக்கெட்டும் எடுக்கவில்லை. துல்லியமான லைனில் பவுலிங் செய்ய முடியாமல் இவர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார். 

எனினும், இவரை நம்பி கோலி 19வது ஓவரை கொடுத்தார். அந்த ஓவரில் சிராஜ் செய்த சம்பவம்தான் தரமானது. ரசல் முழு பார்மில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். 14 பந்தில் 30 ரன்கள் எடுத்து ரசல் களத்தில் நின்று கொண்டு இருந்தார். இதனால் கண்டிப்பாக ரசல் சிராஜ் ஓவரை பறக்கவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

அதற்க காரனம் ஏற்கனவே முந்தைய ஐபிஎல் தொடர்களில் ரசல் சிராஜ் ஓவரை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு இருக்கிறார். சின்னசாமி மைதானத்தில் பல முறை சிராஜ் பவுன்சர் வீச ரசல் சிக்ஸ், பவுண்டரி என்று வானவேடிக்கை காட்டியுள்ளார். ஆனால் நேற்று சிராஜ் வேறு திட்டத்தோடு வந்திருந்தார். 

நேற்று சிராஜ் வேறு திட்டத்தோடு வந்திருந்தார். ரசல் வைட் யார்க்கர் போட்டால் அடிக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்டு வரிசையாக 3 வைட் யார்க்கர் பந்துகளை வீசினார். முழுக்க முழுக்க ஆஃப் சைடில் ஃபீல்டர்களை நிற்க வைத்து, வைட் யார்க்கர்களை ஆப் சைடில் வீசினார். இதை சுத்தமாக ரசலால் அடிக்க முடியவில்லை. 

அதிகபட்சம் ரசல் முயன்றால் பவுண்டரிதான் அடிக்க முடியும். ஆனால் அதை தடுக்கவும் ஆஃப் சைட் முழுக்க பீல்டர்கள் நின்றனர். அதே சமயம், ரசல் சிங்கிள் ஓடும் முடிவிலும் இல்லை. இதை தெரிந்து கொண்டு சிராஜ் வரிசையாக வைட் யார்க்கர்களை வீசினார். 3 பந்துக்கு பின் இதை புரிந்து கொண்டு ரசல், கொஞ்சம் தள்ளி நின்று வைட் யார்க்கரை எதிர்கொள்ள முயன்றார். 

ஆனால் சிராஜ் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அந்த பாலில் ஸ்லோ பவுன்சர் வீசினார். பின்னர் மீண்டும் 5வது பந்தில் சிராஜ் வைட் யார்க்கர் வீசி ரசலை குழப்பினார். முதல் 5 பந்தில் இதனால் ஒரு ரன் கூட செல்லவில்லை. அதிலும் இதில் 4 பந்துகள் 145+ கிமீ வேகத்தில் வந்தது. அதன்பின் கடைசி பந்தில் மட்டுமே 1 ரன் சென்றது. அதே ஓவரிலேயே சிராஜிடம் கொல்கத்தா அணி வீழ்ந்துவிட்டது. அந்த ஓவரில் சென்ற ரன் 0,0,0,0,0,1 ஆகும்.

ஒரு காலத்தில் பெங்களூர் அணியில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ் தற்போது மொத்தமாக மாறியிருக்கிறார். பெங்களூர் அணியின் முக்கியமான டெத் ஓவர் பவுலராக சிராஜ் உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின் சிராஜ் மொத்தமாக புதிய பவுலராக உருவெடுத்துள்ளார். இதற்கு பின் முழுக்க முழுக்க கோலி கொடுத்த ஆதரவு மட்டுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்