'ஆர்சிபி-க்கு ஒரே குஷி தான் போல!.. ஓவரா ஆட வேண்டாம்!.. மொதல்ல 'இத' செய்யுங்க!.. இல்லனா எல்லாமே வீணாயிடும்'!.. விராட் கோலிக்கு வார்னிங் கொடுத்த ஆஷிஷ் நெஹ்ரா!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணியின் தொடர் வெற்றிக்கு பின்னால் உள்ள சிக்கலைப் பற்றி ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 177 ரன்கள் அடித்தது.
அதைத் தொடர்ந்து, 178 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் படிக்கலும், கோலியும் ருத்ரதாண்டவம் ஆடி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை சுருட்டி வீசினர். மேலும், அபாரமாக ஆடிய படிக்கல், இந்த சீசனில் தன்னுடைய முதல் சதத்தை நிறைவு செய்தார். பவுலிங்கை பொறுத்துவரை சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
ஆர்சிபி அணியின் வெற்றிப் பயணம் ஐபிஎல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. அடுத்ததாக ஹைதராபாத் அணியுடனான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி. அதைத் தொடர்ந்து, 3வது ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இதற்கிடையே, நேற்றையை போட்டியிலும் ராஜஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசுர வெற்றியை பெற்றது.
இப்போது வரை பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா, "ஒரு கேப்டனாக விராட் கோலி சின்ன விஷயங்களை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. கூர்ந்து கவனிக்கிறார். இந்த சீசனை ஆர்சிபி தொடங்கிய விதத்தையும், அவர்களின் தொடர் வெற்றிகளையும் பார்த்தால், அவர்கள் தங்களுடைய திறமைகளை சுருக்கிக் கொள்ளக் கூடாது. எளிதாக ப்ளே ஆஃப் சென்றுவிடலாம் என்று எண்ணக்கூடாது.
2009ம் ஆண்டு, நான் டெல்லி அணியில் இருந்தபோது நாங்கள் சில புதிய யுக்திகளை முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், அவற்றை தொடரின் இறுதியில் தான் செய்தோம். ஏனெனில், அப்போது நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்திருந்தோம். எனவே, ஆர்சிபி அணியில் புதிய மாற்றங்கள், யுக்திகளை கோலி முயற்சிக்க திட்டமிட்டிருந்தால், முதலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைவதோடு, பாயின்ட்ஸ் டேபிளில் டாப் 2 இடங்களில் இந்த தொடரை முடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்சிபி அணிக்கு இதைவிட சிறந்த தொடக்கம் இருக்க முடியாது. கோலி, டிவில்லியர்ஸ் மட்டுமின்றி படிக்கல், சிராஜ், சுந்தர் போன்ற இளம் திறமையான வீரர்களை கொண்டுள்ளனர். இவர்களை ஆர்சிபியின் கோர் குரூப்-இல் வைக்க வேண்டும். இந்த சீசனை எப்படி சூப்பர் டூப்பராக ஆர்சிபி அணி தொங்கியதோ, அதே மாதிரி நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வாஷிங்டன் சுந்தரின் சூப்பர் ஆட்டம்... பின்னணி 'இது' தான்!.. வேற லெவலில் சிறப்பு கவனிப்பு!.. ஐபிஎல் மட்டுமில்ல... அதையும் தாண்டிய ஸ்கெட்ச் 'இது'!
- 'அசல விட நகல்... நல்லாவும் இருக்கு... நக்கலாவும் இருக்கு'!.. ராஜஸ்தான் அணி வீரரின் அசாத்திய திறமை... வாயடைத்துப்போன பும்ரா!
- 'இவருக்கு இதே வேலையா போச்சு'!.. 'அடிச்சா காட்டுத்தனமா அடிப்பாரு... இல்லனா பொட்டி பாம்பு மாதிரி கம்முனு இருப்பாரு'!.. இளம் வீரரை கிழித்து தொங்கவிட்ட கம்பீர்!!
- சும்மா சுத்தி சுத்தி அடிச்ச 'இளம்' புயல்.. மிரட்டித் தள்ளிய 'ஓப்பனிங்' காம்போ.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 'RCB' ரசிகர்கள்!!
- 'கண்ணா.. இது சும்மா டிரைலர் தான் மா!.. மெயின் பிக்ச்சர் இன்னும் பாக்கலயே'!.. தல தோனி குறித்து... சுனில் கவாஸ்கர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- அட என்னங்க சொல்றீங்க...? தோனி இதுவரைக்கும் 'அந்த விஷயத்தை' பண்ணதே இல்லையா...! - KKR அணியுடன் விளையாடியபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு...!
- ‘மனுசன் நொறுங்கியே போய்ட்டாரு’!.. அந்த பால் ‘அப்படி’ வரும்னு கொஞ்சம்கூட நெனச்சிருக்க மாட்டாரு.. சிஎஸ்கே ரசிகர்களையும் ‘உருக’ வைத்த போட்டோ..!
- '5 முறை சாம்பியன்ஸ்!.. இந்த டீம்ல இப்படி ஒரு சிக்கலா?.. நம்பவே முடியல'!.. ரோகித் சர்மா என்ன செய்யப்போகிறார்?
- ஏன் ரெண்டு நாளா ‘நட்டு’ விளையாடவே இல்ல?.. என்ன ஆச்சு அவருக்கு..? வார்னர் கொடுத்த ‘முக்கிய’ அப்டேட்..!
- ஸ்டெம்புகளை தெறிக்க விட ப்ளான் பண்ண ஐடியா உண்மையாவே 'மாஸ்டர்' லெவல்...! 'அது மட்டும் பண்ணலன்னா நிலைமை கைமீறி போயிருக்கும்...' - புகழ்ந்து தள்ளிய கம்பீர்...