'தார தப்பட்டை கிழியப்போகுது'!.. IPL-ஐயே தலைகீழாக புரட்டிப்போடும் சூழ்நிலை!.. RCB-க்கு கிடைத்த வரப்பிரசாதம்!.. வசமாக சிக்கிய CSK!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. கேப்டன் கோலி எதிர்பார்க்காத வாய்ப்பு ஒன்று அவருக்கு வந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் மிக வலுவான அணி இருந்தும் கூட இதுவரை ஒருமுறை கூட பெங்களூர் அணி கோப்பையை வென்றது கிடையாது. பெங்களூர் அணியிடம் கிட்டதட்ட எல்லா சீசன்களிலும் நல்ல பேட்டிங் ஆர்டர் இருந்திருக்கிறது. ஆனால் பெரிதாக எந்த சீசனிலும் பெங்களூர் அணியின் பவுலிங் ஆர்டர் ஆதிக்கம் செலுத்தியது இல்லை.

கடந்த சீசனில் பெங்களூர் பவுலிங் கொஞ்சம் ஓகேவாக இருந்தது. பெங்களூர் அணியின் பவுலிங் சொதப்ப முக்கிய காரணம் அந்த அணி ஆடும் பெங்களூர் மைதானம் ஆகும். பெங்களூர் மைதானம் மிகவும் சிறியதாக இருப்பதால் பெரிய அளவில் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. இதனால் பெங்களூர் அணியின் ஹோம் கிரவுண்ட் போட்டிகள் எல்லாம் அந்த அணிக்கே எதிராக திரும்பியது. 

கடந்த வருடம் பெங்களூர் அணி அமீரகத்தில் ஆடியதால், அதன் பவுலிங் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில்தான் 2021 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதன்படி இந்த முறை பெங்களூர் அணி ஆடும் போட்டி எதுவும் பெங்களூரில் நடக்கவில்லை. எல்லா போட்டியும் சென்னை உள்ளிட்ட வேறு வேறு மைதானங்களில் நடக்கிறது. 

இதனால் கேப்டன் கோலி எதிர்பார்க்காத வாய்ப்பு ஒன்று அவருக்கு வந்துள்ளது. இதன் மூலம் பெங்களூர் அணி அதிர்ஷ்டம் இல்லாத பெங்களூர் மைதானத்திற்கு பதிலாக மற்ற மைதானங்களில் அதிரடி காட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் பெங்களூர் அணியின் பவுலிங் சொதப்பியது போல இந்த முறை சொதப்பாது. இது கோலிக்கு மிகப்பெரிய சாதகமாக மாறியுள்ளது. 

அந்த அணியின் பவுலிங் முன்னேற்றம் அடைய இது வாய்ப்பை கொடுக்கும். ஆனால், சென்னை அணிக்கு மும்பை, கொல்கத்தா போன்ற மைதானங்களில் அதிக போட்டிகள் நடக்கிறது. இது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். முக்கியமாக சென்னை அணியின் ஸ்பின் பவுலர்கள் பெரிய அளவில் சோபிக்க முடியாத நிலை ஏற்படலாம். 

ஹோம் கிரவுண்ட் இல்லாமல் ஆடுவது ஒரு பக்கம் பெங்களூர் அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. இன்னொரு பக்கம் சென்னைக்கு அணிக்கு எதிராக சென்றுள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை அணிகள் எப்படி பயன்படுத்துக்கொள்கின்றன என்பது போகபோகத்தான் தெரியும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்