'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!.. மேக்ஸ்வெல் டா'!!.. 5 வருஷம் கழிச்சு... IPL-ல் பின்னியெடுத்துட்டாரு!.. எப்படி சாத்தியமானது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் 5 ஆண்டுகள் கழித்து மேக்ஸ்வெல் மீண்டும் அதிரடி வியூகத்தை கையில் எடுத்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 6வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்த நிலையில், அடுத்ததாக எஸ்ஆர்எச் அணி இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது. இந்நிலையில் ஆர்சிபியின் இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட க்ளென் மாக்ஸ்வெல் அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கவில்லை.  

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அணியில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 33 ரன்களை அடித்திருந்தார். 

அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் க்ளென் மாக்ஸ்வெல் மட்டுமே இன்றைய போட்டியில் 41 பந்துகளில் 59 ரன்களை அடித்துள்ளார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்கள் அடக்கம். கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் 28 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்தார். 

கடந்த ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மாக்ஸ்வெல் சொதப்பினார். 13 போட்டிகளில் விளையாடி 108 ரன்களை அடித்திருந்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அவரை ஐபிஎல் ஏலத்தையொட்டி விடுவித்தது. 

இந்நிலையில், அவர் கடந்த 2016க்கு பிறகு இன்றைய போட்டியில்தான் அரைசதம் அடித்துள்ளார். அவர் அரைசதத்தை அடிக்க 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர் சொதப்பலான ஆட்டத்தை கடந்த சீசன்களில் அளித்த போதிலும் அவர்மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி அவரை இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

அவர்களின் நம்பிக்கையை மாக்ஸ்வெல் பொய்யாக்கவில்லை. முதல் போட்டியில் இருந்தே அவர் தனது அதிரடியை நிரூபித்துள்ளார். இன்றைய போட்டியில் 19வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அவர் தனது அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து அவரது பந்துவீச்சிலேயே அவுட்டும் ஆகியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்