கோலி பேட்டிங் ஆட வந்தா போதும்... ரோகித் இத கண்டிப்பா பண்ணுவாரு!.. ரோகித் விரித்த வலையில்... அலேக்காக விழுந்த கோலி!.. இந்த முறையும் போச்சா!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பைக்கு எதிரான போட்டியில் ஓப்பனராக களமிறங்கிய ஆர்சிபி கேப்டன் விராட் கோலியை வீழ்த்த ரோகித் சர்மா அதிரடி வியூகத்தை வகுத்திருந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்கத்தில் அதிரடி காட்டிய போதும் இறுதியில் திணறியது.
14வது ஐபிஎல் தொடர் மிகுந்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. முதலில் அதிரடியாக ஆடிய மும்பை அணி இறுதியில் ஆர்சிபி அணி ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் சுருண்டது.
பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி ஓப்பனராக களமிறங்கி எதிர்பார்த்தது அளவில் செயல்படவில்லை. 29 பந்துகளை சந்தித்த அவர் 33 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் அடங்கும். நிதானமாக ஆடிவந்த அவரை எதிர்பார்த்தது போலவே பும்ரா எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாக்கினார்.
இங்கிலாந்து டி20 தொடரில் ஓப்பனிங் வீரராக சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி ஐபிஎல் போட்டியிலும் தொடக்க வீராக ஆடுவேன் என அறிவித்தது பல அணிகளுக்கும் தலைவலியை கொடுத்தது.
ஏனெனில், கோலி கடந்த 2016ம் ஆண்டு ஓப்பனராக களமிறங்கி 973 ரன்களை குவித்தார். இதில் 4 சதங்களும் அடங்கும். இந்த ஸ்கோர் தான் ஒரு சீசனில் அதிகமாக எடுக்கப்பட்ட தனி நபர் ரன் ஆகும். ஆனால் இந்த முறை பும்ராவால் 33 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
ஆட்டத்தின் முன்னர் கோலி - பும்ரா போட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா கணித்திருந்தார். அதில், விராட் கோலி பேட்டிங்கிற்கு களமிறங்கும் போதெல்லாம், ரோகித் சர்மா பும்ராவை தான் ஓவர் வீச அழைப்பார்.
பும்ராவின் பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயற்சி செய்து விராட் கோலி 2-3 முறை அவுட்டாகியுள்ளார். வழக்கமாக விராட் கோலி இதுபோன்று அவுட்டாக மாட்டார். ஆனால், பும்ராவிடம் மட்டும் அடித்து ஆட முயற்சித்து தவறான ஷாட்களால் அவுட்டாகி வெளியேறுவார் என தெரிவித்தார்.
ஆகாஷ் சோப்ரா கணித்தது போலவே விராட் கோலி, பும்ராவின் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கோலி விக்கெட்டை காலி செய்ய பும்ரா தான் சரியான தேர்வு என்பது ரோகித் சர்மாவுக்கு நன்றாக தெரிந்துள்ளது. இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இனிமேலாவது பும்ராவிடம் கோலி எளிதில் அவுட்டாகாமல் ஆட வேண்டும் என்பதே ஆர்சிபி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாத்துகோங்க...! அவ்ளோ தான் சொல்ல முடியும்...' 'அவங்க பாதுகாப்புக்கு நீங்க தான் பொறுப்பு...' - நியுசிலாந்து பிரதமர் கருத்து...!
- 'கழுகு மாதிரி காத்திருந்து... சட்டுனு தூக்கிட்டோம்'!.. 'பல நாள் ஸ்கெட்ச்'!.. கோலியின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த வீரர்!.. RCB-யின் கேம் ப்ளான் இதோ!
- 'ஒரு ப்ளேயர் எப்படிங்க பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்னு... எல்லா நேரத்திலயும் சூப்பரா ஆட முடியும்?.. இவர் அசால்ட்டா அடிச்சு நொறுக்குறாரு'!.. த்ரில் பின்னணி!
- 'சிவனேன்னு இருந்த அந்த மனுஷனை கடுப்பேத்தி' ... 'ராகுல் பாயின் மறுபக்கம்'... 'கோலி பகிர்ந்த வீடியோ'... இணையத்தைத் தெறிக்கவிடும் வீடியோ!
- 'தார தப்பட்டை கிழியப்போகுது'!.. IPL-ஐயே தலைகீழாக புரட்டிப்போடும் சூழ்நிலை!.. RCB-க்கு கிடைத்த வரப்பிரசாதம்!.. வசமாக சிக்கிய CSK!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘இந்த தடவை கப் வின் பண்ண அவங்களுக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு’!.. ‘சும்மா சொல்லல, செம ஸ்ட்ராங்கா இருக்காங்க’.. அஸ்வின் கணித்த அணி எது..?
- ‘போன வருசம் நடந்த சர்ச்சை’!.. எல்லாத்துக்கும் ‘முற்றுப்புள்ளி’ வச்ச சிஎஸ்கே சிஇஓ.. ரசிகர்களை உருக வைத்த ‘அந்த’ வார்த்தை..!
- 'அவர பார்த்து மிரண்டுட்டேன்!.. இப்போ என் கண்ணுக்கு வேற மாதிரி தெரியுராரு'!.. தினேஷ் கார்த்திக்-ஐ மிரளவைத்த சீனியர் வீரர்!.. KKR-ன் சூப்பர் ஹீரோ!?
- 'அஷ்வின்ணா உட்றாதீங்க ணா'!.. இந்த IPL-க்கு அப்புறம் அவரோட ரேஞ்சே வேற!.. ஒரே கல்லுல 3 மாங்கா!.. பரபரப்பு பின்னணி!
- இது என்னடா RCB-க்கு வந்த புது சோதனை!.. நல்ல ப்ளேயர்ஸ் எடுத்தது ஒரு குத்தமா?.. சட்டு புட்டுனு செட்டில் ஆகுங்க... என்ன செய்யப் போகிறார் கோலி?