'ஜஸ்ட் மிஸ்... நூலிழையில் தப்பிய கோலியின் கண்!.. அவரே கலங்கிப்போயிட்டாரு பாவம்!.. அவசர அவசரமாக நடத்தப்பட்ட மருத்துவ சோதனை'!.. உடைந்துபோன ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்று ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.
கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஏபிடி வில்லியர்ஸ் காட்டிய அதிரடியால் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி பந்தில் சிங்கிள் அடித்து, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வென்றது. இந்த போட்டி முதலில் மும்பை வசமே இருந்தது. முதல் 10 ஓவரில் மும்பை அணி 90+ ரன்கள் எடுத்து இருந்தனர்.
ஆனால் அதன்பின் மோசமான ஆட்டத்தால் திணறிய மும்பை அணி 159 ரன்களுக்கு சுருண்டது. இதில் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் அமர்க்களமாக பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து, இரண்டாவதாக பேட்டிங் செய்த பெங்களூர் அணி, ஆரம்பத்தில் கொஞ்சம் திணறியது. சுந்தர், படிடார் அவுட்டாக கோலி, மேக்ஸ்வெல் மட்டுமே கொஞ்சம் அதிரடியாக ஆடினார்கள். அவர்களும் அவுட்டான பின் ஆட்டம் மும்பை வசம் சென்றது. ஆனால், கடைசியில் ஏபிடி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்த போட்டியில் க்ருணால் பாண்டியா பேட்டிங் செய்த போது, கெயில் ஜாமிசன் ஓவரில் அவர் அடித்த பந்து ஒன்று நேராக கோலிக்கு கேட்ச் சென்றது. முகத்தை நோக்கி வந்த பந்தை கோலி கணிக்க தவறினார். பந்து கோலியின் கையில் வேகமாக பட்டு, கண்ணுக்கு கீழே அடித்தது. இதில் அவரின் கண் கலங்கி போனது.
அதிவேகமாக வந்து பந்து பட்டதில், கோலியின் கண்ணுக்கு கீழ் பெரிதாக வீங்கி, சிவந்து போனது. ஒரு நொடி அவரின் கண் மொத்தமாக கலங்கி, நிலைகுலைந்து போனார். பின் சுதாரித்துக் கொண்ட அவர் தொடர்ந்து பீல்டிங் செய்தார். நேற்று இவரின் கண்ணில் பிரச்சனை எதுவும் இல்லை.
எனினும், பாதுகாப்பு கருதி நேற்று இவரின் கண்கள் சோதனை செய்யப்பட்டன. பந்து அடித்ததில் கண்ணுக்கு எதுவும் பாதிப்பா என்று இரவோடு இரவாக சோதனை செய்யப்பட்டது. கோலியின் கண்ணுக்கு பாதிப்பு இல்லை, கண்ணுக்கு கீழ் கன்னம் அருகே லேசான ரத்த கட்டு ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாத்துகோங்க...! அவ்ளோ தான் சொல்ல முடியும்...' 'அவங்க பாதுகாப்புக்கு நீங்க தான் பொறுப்பு...' - நியுசிலாந்து பிரதமர் கருத்து...!
- 'கழுகு மாதிரி காத்திருந்து... சட்டுனு தூக்கிட்டோம்'!.. 'பல நாள் ஸ்கெட்ச்'!.. கோலியின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த வீரர்!.. RCB-யின் கேம் ப்ளான் இதோ!
- 'ஒரு ப்ளேயர் எப்படிங்க பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்னு... எல்லா நேரத்திலயும் சூப்பரா ஆட முடியும்?.. இவர் அசால்ட்டா அடிச்சு நொறுக்குறாரு'!.. த்ரில் பின்னணி!
- ‘இனி இலவசமாக ஐபிஎல் மேட்ச் பார்க்கலாம்’!.. அதிரடியான பல ‘புதிய’ ஆஃபர்களை அறிவித்த ஜியோ..!
- 'சிவனேன்னு இருந்த அந்த மனுஷனை கடுப்பேத்தி' ... 'ராகுல் பாயின் மறுபக்கம்'... 'கோலி பகிர்ந்த வீடியோ'... இணையத்தைத் தெறிக்கவிடும் வீடியோ!
- 'தார தப்பட்டை கிழியப்போகுது'!.. IPL-ஐயே தலைகீழாக புரட்டிப்போடும் சூழ்நிலை!.. RCB-க்கு கிடைத்த வரப்பிரசாதம்!.. வசமாக சிக்கிய CSK!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘இந்த தடவை கப் வின் பண்ண அவங்களுக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு’!.. ‘சும்மா சொல்லல, செம ஸ்ட்ராங்கா இருக்காங்க’.. அஸ்வின் கணித்த அணி எது..?
- ‘போன வருசம் நடந்த சர்ச்சை’!.. எல்லாத்துக்கும் ‘முற்றுப்புள்ளி’ வச்ச சிஎஸ்கே சிஇஓ.. ரசிகர்களை உருக வைத்த ‘அந்த’ வார்த்தை..!
- 'அவர பார்த்து மிரண்டுட்டேன்!.. இப்போ என் கண்ணுக்கு வேற மாதிரி தெரியுராரு'!.. தினேஷ் கார்த்திக்-ஐ மிரளவைத்த சீனியர் வீரர்!.. KKR-ன் சூப்பர் ஹீரோ!?
- 'அஷ்வின்ணா உட்றாதீங்க ணா'!.. இந்த IPL-க்கு அப்புறம் அவரோட ரேஞ்சே வேற!.. ஒரே கல்லுல 3 மாங்கா!.. பரபரப்பு பின்னணி!