'ஏன் பா... 5 விக்கெட் போதுமா?.. என்ன பவுலிங் இது?.. வரலாற்றையே மாத்திட்டாரு'!.. மிரண்டுபோன கோலி!.. ஆர்சிபி-ல இப்படி ஒரு ப்ளேயரா!?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

மும்பை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து உள்ளார். 

முதலில் மிகவும் சிறப்பாக ஆடிய மும்பை அணி கடைசி கட்டத்தில் கடுமையாக திணறியது. பெங்களூருக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. முதல் 10 ஓவரிலேயே மும்பை அணி 90 ரன்கள் எடுத்தது. மும்பை எப்படியும் 180-200 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த 10 ஓவரில் பெங்களூர் அணி சிறப்பாக பவுலிங் செய்தது. 

அதிலும் பெங்களூர் அணிக்காக புதிதாக களமிறங்கி இருக்கும் ஹர்ஷல் பட்டேல் தொடக்கத்தில் இருந்து பிரமாதமாக பவுலிங் செய்தார். இவரின் முதல் 2 ஓவர் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், அடுத்த 2 ஓவர்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். அதிலும் கடைசி ஓவரில் இவர் மும்பை அணியை மொத்தமாக காலி செய்தார். 

முதல் 2 ஓவரில் 2 விக்கெட் எடுத்த ஹர்ஷல் பட்டேல், கடைசி ஓவரில் 3 விக்கெட் எடுத்தார். அதிலும் மும்பையின் முக்கியமான வீரர்களான இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்ணால் பாண்டியா என்று வரிசையாக விக்கெட் எடுத்து, இவர் வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

இதன் மூலம், பெங்களூர் அணியின் புதிய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக ஹர்ஷல் உருவெடுத்துள்ளார். மும்பை வசம் இருந்த போட்டியை மொத்தமாக புரட்டி போட்டுள்ளார். 30 வயதான இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி உள்ளார். டெல்லிக்காக சில போட்டிகளில் நன்றாக ஆடி இருக்கிறார். பெங்களூர் அணிக்காக பயிற்சி ஆட்டங்களில் நன்றாக ஆடினார். 

பயிற்சி ஆட்டங்களில் நன்றாக பவுலிங் செய்ததோடு, பேட்டிங் செய்து ஃபினிஷிங்கும் செய்தார். இதுவரை 49 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பெங்களூருக்காக ஆடிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட் எடுத்து கோலியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

மேலும், மிகவும் விறுவிறுப்பாக செல்லும் போட்டிகளில், பவுலிங்கோ பேட்டிங்கோ எதுவாக இருந்தாலும் இறுதியில் அணிக்காக நின்று வெற்றியை பெற்றுத்தரக்கூடிய வீரராக ஆர்சிபிக்கு அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்