'சார் கலக்கிட்டீங்க'!.. 'இல்ல என்ன மன்னிச்சிடுங்க... நான் பண்ணது பெரிய தப்பு'!.. 'அது இல்ல சார்'... 'அய்யோ ப்ளீஸ்'!.. விரட்டி விரட்டி மன்னிப்பு கேட்கிறாரு!.. என்னவா இருக்கும்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அணியை வெற்றிபெற வைத்தாலும் தான் செய்த சிறிய தவறுக்காக ஆர்சிபி அணியின் இளம் வீரர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நடந்த ஆறாவது லீக் மேட்சில் பெங்களூர் ராயல் சேலஞ்ரசர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் என்ற எளிதான இலக்கை சேஸ் செய்த ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூவிடம் தோல்வியைச் சந்தித்தது.

விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியின் கடைசி கட்ட ஓவர்களில் இரண்டு ஹைபுல்டாஸ் நோ பால்களை வீசி பெங்களூர் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார் அந்த அணியின் பாஸ்ட் பௌலர் ஹர்ஷல் பட்டேல். 17வது ஓவரின் 4வது பந்தை ஹோல்டருக்கும், 19வது ஓவரின் 3வது பந்தை ரஷித் கானிற்கும் நோபாலாக வீசினார்.

டெத் ஓவர்களில் பௌலர்கள் ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருக்க பயன்படுத்தும் உக்தியான யார்க்கர் லெந்தை ஹர்ஷல் பட்டேல் மிஸ் செய்ததால் இரண்டு பந்துகளும் பேட்ஸ்மேன்களின் இடுப்புக்கு மேலே சென்று நோபாலாக அமைந்தது.

போட்டி முடிந்ததும் பேட்டியளித்த ஹர்ஷல் பட்டேல், தனக்கு உறுதியான கரங்கள் இருப்பதாகவும், ஆனால் இதுபோன்ற நேரத்தில் நோ பால்கள் வீசுவது என்பது ஏற்கமுடியாத ஒரு விஷயமாகும், இந்த செயலுக்கு மன்னிப்பே கேட்க முடியாது. நோ பால் வீசுவது கிரிக்கெட்டில் ஒரு சிறிய தவறு என்றாலும், அது எந்த நேரத்தில் வீசப்படுகிறது என்பதைப் பொறுத்து அந்த தவறானது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்.

அணியின் கேப்டன் விராட் கோலி என் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளார். அதைப்போல நானும் இக்கட்டான நேரங்களில் பந்து வீசுவதையே மிகவும் விரும்புகிறேன். இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் நோபால் வீசாமல் சிறப்பாக செயல்படுவேன் என்று கூறினார்.

பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட போது டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்ஷல் பட்டேல் அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியிலும் சிறப்பாக பந்து வீசிய பட்டேல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்