'ஆர்சிபி'க்கு எப்ப தான் பொறுப்பு வரும்?.. செம்ம வாய்ப்பு இருந்தும்... இப்படியா சொதப்புவது?.. வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக வீரரை ஆர்சிபி அணி சரியாக பயன்படுத்தவில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட்டது. 7 போட்டிகளில் விளையாடி அந்த அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதற்கு முக்கிய காரணம், ஆர்சிபி அணியின் பவுலிங் இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் அற்புதமாக அமைந்தது. குறிப்பாக, டெத் ஓவர்களில் அந்த அணி 10 ஓவர்களுக்கும் குறைவாக கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இந்த ஆண்டு ஹர்ஷல் பட்டேல், சந்தீப் சர்மா, கெயில் ஜேமிசன் ஆகியோர் இருந்தனர். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், வாஷிங்டன் சுந்தரை ஒரு பவுலராக ஆர்சிபி அணி நன்கு பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர்களால் சுந்தருக்கு நிறைய ஓவர்களை கொடுத்திருக்க முடியும், ஆனால் கொடுக்கவில்லை. இதனால் அவர் 6 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 31 ரன்களும், பவுலிங்கில் 3 விக்கெட்டையும் மட்டுமே எடுத்துள்ளார். 

யுவேந்திர சஹால் இந்த தொடரில் குறைவான விக்கெட்டை தான் எடுத்தார். இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள யுவேந்திர சஹால் மொத்தமாக 4 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் இந்த தொடரில் அதிக ரன்களை கொடுத்த வீரர்களில் ஒருவராகவும் உள்ளார். அவரின் பவுலிங் எகானமி ஓவருக்கு 8.26 ரன்களை வாரி கொடுத்துள்ளார். அவருக்கு குறைவான ஓவர்களை கொடுத்துவிட்டு வாஷிங்டன் சுந்தருக்கு ஓவர் கொடுத்திருக்கலாம் எனத்தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, பெங்களூரு அணியின் பேட்டிங்கிலும் குறை உள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். தொடக்கத்தில் டாப் ஆர்டரில் கோலி, பட்டிக்கல், ராஜட் பட்டிதர், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என ஆடினாலும் 6வது இடத்திற்கு சரியான வீரர் இல்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் டேனியல் கிறிஸ்டியன் இருந்தாலும் அங்கு அவர்கள் பொருத்தமாக இல்லை. இதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் அதிகரிக்கிறது. இதுவரை அவர்கள் சமாளித்துவிட்டனர். எனினும், அது அவர்களுக்கு ஒரு பலவீனம் தான். 

வாஷிங்டன் சுந்தருக்கு ஐபிஎல் தொடரில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அங்கு கடும் போட்டி நிலவுவதால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியுன் எழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்