'அசல விட நகல்... நல்லாவும் இருக்கு... நக்கலாவும் இருக்கு'!.. ராஜஸ்தான் அணி வீரரின் அசாத்திய திறமை... வாயடைத்துப்போன பும்ரா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஐஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஸ்ரேயாஸ் கோபால் பயிற்சியின்போது செய்த சம்பவம் பும்ராவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

என்னை விட உங்களின் பந்துவீச்சு சாயல் சிறப்பாக இருக்கிறது என்று ஐஸ்பிரித் பும்ரா பாராட்டியதாக ஸ்ரேயாஸ் கோபால் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 

இளம் வீரர்களை அதிகம் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் தடுமாறி வருகிறது. 3 போட்டியில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால். மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து புள்ளி அட்டவணை பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது. 

இன்று பலம் வாய்ந்த பெங்களுரு அணியை எதிர்த்து மோதவுள்ள ராஜஸ்தான் மீண்டும் வெற்றியை வெற்றியை பெற வேண்டிய ஆர்வத்துடன் உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த அணியின் வீரர் ஸ்ரேயாஸ் கோபால் செய்த செயல் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

ராஜஸ்தான் அணி பயிற்சியின் போது ஸ்ரேயாஸ் கோபால், பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சாயல் போல் பந்து வீசி அசத்தினார். இது தொடர்பான வீடியோவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரேயாஸ் கோபால், பும்ராவைப் போல் பந்து வீசும் காட்சியை பும்ராவிடம் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு என்னை விட எனது சாயலில் நீங்கள் நன்றாக பந்து வீசுகிறீர்கள் என்று பும்ரா தெரிவித்ததாக ஸ்ரேயாஸ் கோபால் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். 

ஸ்ரேயாஸ் கோபால் வீடியோவை பார்த்த பலரும் அவர்களை விட உங்கள் ஆக்ஷன் மிக சிறப்பாக உள்ளதாக பாராட்டியுள்ளனர். இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு ஆட்டத்தில் மட்டும் ஸ்ரேயாஸ் கோபால் இடம் பெற்றார். ஆனால், பந்துவீச்சில் 40 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. ஸ்ரேயாஸ் கோபால் கடந்த ஆண்டு ராஜஸ்தானுக்காக 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்