'இவருக்கு இதே வேலையா போச்சு'!.. 'அடிச்சா காட்டுத்தனமா அடிப்பாரு... இல்லனா பொட்டி பாம்பு மாதிரி கம்முனு இருப்பாரு'!.. இளம் வீரரை கிழித்து தொங்கவிட்ட கம்பீர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று பீல்டிங்கை ஆர்சிபி தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் துவக்க வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். 

முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறியது. அணியின் ஜோஸ் பட்லர், வோரா மற்றும் மில்லர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறிய நிலையில், நம்பிக்கையுடன் அணியின் கேப்டன சஞ்சு சாம்சன் விளையாடினார். 

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி நம்பிக்கையை இழந்த நிலையில், கேப்டன் சஞ்சு சாம்சன் நம்பிக்கையூட்டும் வகையில் தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்த அவர் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் ஒரு சூப்பர் சிக்சை அடித்தார். 

அதன் பிறகுதான் ஆட்டத்தில் ஒரு ட்விஸ்ட் வந்தது. அடுத்த பந்தை வாஷிங்டன் சுந்தர் ஸ்லோ பந்தாக வீசினார். அதை தூக்கி அடித்த சாம்சன், க்ளென் மேக்ஸ்வெல்லிடம் பந்தை கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், "ஐபிஎல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒரு ப்ளேயர் அந்த சீசன் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சவாலாக இருந்து வருகிறது. கோலி, ரோகித், டி வில்லியர்ஸ் போன்ற திறமையான வீரர்கள் கூட ஏதாவது ஒரு போட்டியில் அபாரமாக ஆடி ரன் குவித்துவிட்டு, பின் அடுத்து வரும் சில போட்டிகளில் சொதப்புவார்கள். ஆனால், அவர்கள் எப்போதுமே 30 - 40 ரன்கள் சராசரியாக அடித்துவிடுவார்கள். ஆனால், சஞ்சு சாம்சனை பொறுத்துவரை, அவர் ஆடினால் அபாரமாக ஆடுவார், இல்லையெனில் சுத்தமாக அடிக்க மாட்டார்" என்று விமர்சித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்