'அவர டார்ச்சர் பண்ண முடியாது!.. நடக்குறது நடக்கட்டும்!.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ'!?.. பயங்கர நெருக்கடியில் ராஜஸ்தான் அணி!.. என்ன சிக்கல்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார சங்ககாரா குறிப்பிட்டுள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாததால் ராஜஸ்தான் அணிக்கு ஏற்படும் இழப்புகள் என்ன?
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்றைய தினம் மோதகின்றன. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. அவருக்கு வலது கையில் செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை காரணமாக அவர் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் எற்பட்ட காயம் காரணமாக அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்துவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மீன் தொட்டியை சுத்தம் செய்தபோது கையில் க்ளாஸ் துகள்கள் கீறி காயமானதையடுத்து, அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த துகள்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவர் விரைவில் அணியில் இணைய வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நெருக்கடி அளிக்காது என்று அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார். எனினும், தொடக்க போட்டிகளில் அவர் அணியில் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், ஆர்ச்சர் தனது பிட்னசை நிரூபித்து கூடியவிரைவில் அணியில் இணைவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே வேலையில், அவர் ஐபிஎல்லின் சில போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்றும் சங்ககாரா கூறியயுள்ளார். முன்னதாக அவரது இருப்பை வைத்தே அணியின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லுக்காக மட்டுமின்றி அவரது சர்வதேச ஒப்பந்தங்களுக்காக அவர் கூடிய விரைவில் குணமடைவது அவசியம் என்றும் சங்ககாரா தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பௌலராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!
தொடர்புடைய செய்திகள்
- ‘என் ஒரே ஆசை அது ஒன்னுதான்’!.. சல்மான் கானின் பழைய ட்வீட்டை மேற்கோள் காட்டி பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பதிவிட்ட உருக்கமான ட்வீட்..!
- படிக்க வேண்டிய வயசுல... கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு பாடம் எடுத்த வீரர்!.. என்னா அடி!.. ஐபிஎல் உலகம் ஷாக்!.. வாயடைத்துப்போன SRH!.. தரமான சம்பவம்!!
- 'செட் ஆகுறதுக்கு 2 பால் எடுத்துக்கிட்டாப்புல...' 'அதுக்கப்புறம் ஒவ்வொண்ணும் சரவெடி...' - அடிச்சு நொறுக்கி தள்ளிய வீரர்...!
- இதுக்கு மேல முடியாது நட்டு...! 'ஏதாச்சும் பண்ணுங்க...' 'கடுப்பான வார்னர்...' - அடுத்த ஓவர் என்ன பண்ணார் தெரியுமா...?
- ‘இன்னைக்கு அந்த 3 பேரும் கேப்டன் ஆகி இருக்காங்கன்னா, அதுக்கு விதை போட்டது தோனிதான்’!.. தாறுமாறாக புகழ்ந்த பட்லர்..!
- தோனிய கன்னாபின்னானு 'அவரு' திட்டுறத நானே என் கண்ணால பார்த்துருக்கேன்...! 'அப்புறம் தோனிகிட்ட நானே போய் பேசினேன், அப்போ அவரு...' - சீக்ரெட்-ஐ உடைத்த சேவாக்...!
- 25 வருஷம் முன்னாடி நடந்த 'அந்த' சம்பவம்...! 'டிவிட்டர்ல வாண்டடா வந்து கிண்டல் செய்த ஜர்னலிஸ்ட்...' - வச்சு செய்த வெங்கடேஷ் பிரசாத்...!
- 'அவருக்கெல்லாம் பெருசா அனுபவம் கிடையாது...' அதனால தோனி கண்டிப்பா 'இத' பண்ணனும்...! - அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்...!
- ‘இது வெறும் நகைச்சுவைதான், யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்’!.. ரெய்னாவை கிண்டல் செய்யும் விதமாக சேவாக் பதிவிட்ட ட்வீட்..!
- ‘அவரும் எவ்வளவுதான் பொறுமையா இருப்பாரு’!.. கூல் கேப்டனை டென்சனாக்கிய ‘அந்த’ சம்பவம்..!