'செம்ம ஃபார்ம்ல இருந்த சன்ரைசர்ஸ் அணி!.. இப்படியா சொதப்புவீங்க?'.. மோசமான தோல்வி!.. 'அவங்க பண்ண தப்பு 'இது' தான்!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேபிடல்ஸ் அணியிடம், பிளே-ஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

முக்கியமான போட்டி என்ற போதும் ஹைதராபாத் அணி பல தவறுகளை செய்தது. அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.  

இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தவான் 78 ரன்கள் குவித்தார். ஹெட்மயர் 42, ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.  ஹைதராபாத் அணி பீல்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தது. ரஷித் கான் ஓவர் த்ரோ செய்து ஒரே பந்தில் ஆறு ரன்கள் கொடுத்தார்.

நடராஜன் ஒரு ஃபோரை தடுக்கத் தவறினார். போட்டி முழுவதும் இது போன்ற சில தவறுகள் தொடர்ந்து நடந்தது. அதே போல, பல கேட்ச் வாய்ப்புகளும் பறிபோனது. டெல்லி அணியில் அதிக ரன் எடுத்த தவான், ஹெட்மயர், ஸ்டோய்னிஸ் என மூவரும் கொடுத்த கேட்ச்களை ஹைதராபாத் அணி வீரர்கள் தவறவிட்டனர். அது போட்டியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

ஹைதராபாத் அணியில் கட்டுகோப்பாக பந்து வீசிய ஒரே பந்துவீச்சாளர் ரஷித் கான் மட்டுமே. அவரை பவர் பிளே ஓவர்களில் டெல்லி ரன் குவித்த போது பயன்படுத்த தவறினார் கேப்டன் டேவிட் வார்னர். அது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தது. 

அடுத்து 190 ரன்கள் என்ற கடினமான சேஸிங்கில் வார்னர் விக்கெட் விரைவாக வீழ்ந்த நிலையில், நிலைத்து ஆடிய கேன் வில்லியம்சனுக்கு யாரும் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

அப்துல் சமத் ஒத்துழைப்பு அளித்து ஆடிய போது தேவைப்படும் ரன் ரேட் 12 ரன்களை தாண்டி இருந்தது. இதுவே தோல்விகளுக்கு காரணம் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்