'யோவ் நாட்டாமை... என்னயா இது?.. போங்கு ஆட்டம் ஆடுறீங்களா'?.. மேட்ச்சின் நடுவே அம்பயர்களிடம்... திடீரென மல்லுக்கட்டிய ராகுல்!.. பூதாகரமாகும் சிக்கல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே எல் ராகுல் செய்த ஒரு சம்பவம் அனைத்து அணிகளின் கேப்டன்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. பஞ்சாப் நேற்று சிறப்பாக ஆடி இருந்தாலும், டெல்லி ஓப்பனர்களின் அதிரடி காரணமாக பஞ்சாப் வீழ்ந்தது.
நேற்று டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்தது. பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு நேற்று வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணியின் பவுலர்கள் மிக மோசமாக சொதப்பினார்கள். இதனால் டெல்லி வெறும் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் நேற்று கேப்டனாக ராகுல் நிறைய தவறுகளை செய்தார். இவரின் ஓவர் ரொட்டேஷன் சரியில்லை. இவர் ஃபீல்டிங் நிற்க வைத்த விதமும் சரியாக அமையவில்லை. இதுவே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதைவிட முக்கியமாக நேற்று ராகுல் பாஸ்ட் பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை. மும்பை பிட்ச் பாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமான பிட்ச். எனினும், ராகுல் இவர்களுக்கு சரியான லைன் மற்றும் லென்தில் போடும்படி ஊக்குவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், நேற்று அதிகம் பனி பெய்ததால், பந்து ஈரமானதும் கூட அந்த அணிக்கு எதிராக சென்றது. பனி பெய்ததால் பாஸ்ட் பவுலர்களின் ஓவரில் அதிக ரன்கள் செல்கிறது என்று நேற்று ராகுல் நடுவரிடம் கூட புகார் வைத்தார். பனி காரணமாக பிட்ச் ஈரமாக இருக்கிறது. பந்து நழுவி நழுவி செல்கிறது. இதனால் பந்தை மாற்றுங்கள் என்று ராகுல் நடுவரிடம் கோரிக்கை வைத்தார்.
இரண்டு முறை நடுவரிடம் ராகுல் இப்படி கோரிக்கை வைத்தார். ஆனால் நடுவர்கள் ராகுலின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக இதற்கெல்லாம் ரூல்சில் இடமில்லை, புதிய பந்தை கொடுக்க முடியாது என்று கூறி கே. எல் ராகுலுக்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு போட்டியில், டெல்லி அணி தோல்வியைத் தழுவியது. அப்போது பேசிய அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் குறிப்பிட்டது போன்றே தோல்விக்கு பனியை ஒரு காரணமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எத்தனை வருஷத்து பகை தெரியுமா?.. மொத்தமா பழி தீர்த்துட்டாரு'!.. சிராஜ் பவுலிங் குறித்து... கோலி வெளியிட்ட அதிரவைக்கும் சீக்ரெட்!
- VIDEO: ‘மனசுல இருந்த சோகம்’!.. கையெடுத்து கும்பிட்டு கலங்கிய ‘சஹால்’ மனைவி.. வெளியான ‘உருக்கமான’ பின்னணி..!
- 'சீனியர் ப்ளேயர்னு டீம்ல எடுத்ததுக்கு... உன்னால என்ன பண்ண முடியுமோ 'அத' பண்ணிட்ட'!.. ஒரே ஒரு மிஸ்டேக்!.. பெரிய தலை வலி!.. செம்ம கடுப்பில் ரிஷப் பண்ட்!
- VIDEO: 'ஏதோ கண்ணாடி நொறுங்குற சத்தம்...' 'பின்னாடி திரும்பி பார்த்தா...' 'அடிச்ச அடி அப்படி...' 'சல்லி சல்லியா உடைஞ்சிடுச்சே...' - வைரல் வீடியோ...!
- 'எப்பா... போதும்பா சாமி!.. இதுக்கு மேல முடியாது'!.. 'ஏன் 'இந்த' தப்ப பண்ணீங்க'?.. கடும் நெருக்கடியில் ஹைதராபாத் அணி!.. மீண்டும் கோட்டைவிட்டது எப்படி?
- 'இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா'?.. ஜடேஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி!.. பிசிசிஐ முடிவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்பு!.. என்ன நடக்கிறது?
- VIDEO: ‘120 கி.மீ வேகத்தில் வந்த பந்து’!.. ‘ஐய்யோ! அவருக்கு என்ன ஆச்சு’.. ‘சீக்கிரம் ஓடிப்போய் பாருங்க’.. உள்ளூர் ‘கிரிக்கெட்’ போட்டியில் நடந்த அதிர்ச்சி..!
- 'என்னது மேட்ச்ல நடராஜன் இல்லயா?.. ஏன்... எதுக்கு டீம்ல இருந்து தூக்குனீங்க?'.. கொந்தளித்த ரசிகர்கள்!.. பின்னணி என்ன?
- ‘ஷமி காலைத் தொட்டு கும்பிட்ட சாகர்’!.. மைதானத்தில் நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்.. வைரலாகும் போட்டோ..!
- ‘ப்ளேயிங் 11-ல கேதர் ஜாதவை எடுங்கய்யா’!.. ‘ஏன்னா அவருக்கு இந்த அனுபவம் இருக்கு’.. SRH-க்கு முன்னாள் வீரர் சொன்ன முக்கிய அட்வைஸ்..!