'பேச்சாடா பேசுனீங்க!.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க!'.. பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்!.. ஆர்சிபியை பஞ்சாப் கிங்ஸ் ஊதித் தள்ளியது எப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணியுடனான இன்றைய போட்டியில் தோல்வியடைந்த பெங்களூர் அணி சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் – கிறிஸ் கெய்ல் கூட்டணி அதிரடியாக விளையாடி மளமளவென ரன் குவித்தது. கிறிஸ் கெய்ல் சதமே அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிறிஸ் கெய்ல் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தார்.

கெய்ல் விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரண் (0), தீபக் ஹூடா (5) மற்றும் ஷாருக் கான் (0) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டை சரிந்தாலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடிய கே.எல் ராகுல் 57 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும், கடைசி நேரத்தில் ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய ஹர்ப்ரீட் ப்ரார் 25 ரன்களும் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள பஞ்சாப் அணி 179 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணியில் விராட் கோலி (35), ராஜட் படிதர் (31) மற்றும் ஹர்சல் பட்டேல் (31) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அசத்தலாக பந்துவீசிய ஹர்ப்ரீட் ப்ரார் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அதே போல் தோல்வியடைந்த பெங்களூர் அணி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்