'லாக்டவுன்ல என்ன பண்றதுனு தெரியல... இப்போ இந்த வியாபாரம் தான் ஓடிட்டு இருக்கு'!.. புதிய தொழிலில் குதித்த ஜிம்மி நீஷம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் முடிந்து தாய் நாட்டிற்கு திரும்பிய நியூசிலாது வீரர் ஜிம்மி நீஷம் புதிய தொழிலை கையில் எடுத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா பாதிப்பு அதிகரித்தது காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்றிருந்த அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் தான் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமும் நியூசிலாந்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.  

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்ற ஜிம்மி நீஷம் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் நியூசிலாந்து சென்றடைந்த அவர், தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு பொழுதுபோகவில்லை என்பதால் வேறு தொழிலை கையில் எடுத்துள்ளார். 

நீஷம் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக வலம் வருபவர். இவர் தற்போது Personalised Video செய்துகொடுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அதாவது ரசிகர்கள் யாரானேனும் பணம் அனுப்பி, தனது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் வாழ்த்து, ஊக்குவிக்கும் பேச்சு எதையேனும் கேட்டால், நீஷம் அதனை செய்து தனிப்பட்ட முறையில் வீடியோ அனுப்புவார். 

குவாரண்டைன் காலத்தின் போது பொழுதை கழிக்க அவர் இப்படி செய்து வருகிறார். இதற்காக ஸ்வைஸ் செயலிலும் உள்ளது. அதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களிடம் பணம் செலுத்தி வாழ்த்து வீடியோக்களை பெறலாம். அந்தவகையில் ஜிம்மி நீஷமுக்கு ரூ. 4000 செலுத்தினால் வீடியோ கிடைக்கும். 

                 

மற்ற நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக தயாராகி வருகின்றனர். ஆனால், ஜிம்மி நீஷமுக்கு நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு சுதந்திரமாக தனது வீட்டிற்கு அவர் செல்லவுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்