போன ஐபிஎல் சீசன்ல பட்டைய கிளப்பிட்டாரு... இந்த முறை நடராஜனின் திட்டம் 'இது' தான்!.. செம்ம குஷியில் சன்ரைசர்ஸ் அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஐபிஎல் சீசனில் நாயகனாக வலம் வந்த நடராஜன், இந்த ஐபிஎல் தொடருக்கான தன்னுடைய திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடருக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் பரபரப்பாக காணப்படுகின்றன. மேலும், கொரோனா பரவலும் அணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வைத்துள்ளது. இந்நிலையில், எஸ்ஆர்எச் அணியும் சென்னையில் முகாமிட்டு பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இதனிடையே தன்னுடைய குவாரன்டைனை முடித்துக் கொண்டு அணியில் இணைந்துள்ள பௌலர் நடராஜன் தான் அணிக்கென 100 சதவிகித பங்களிப்பை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய லென்த்தை தவற விடாமல் இந்த சீசனில் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சீசனில் அதிகமாக ரன்களை கொடுக்காமல் பந்துவீச முயற்சிக்க உள்ளதாகவும், கடந்த தொடர்களில் நெருக்கடியுடன் விளையாடியது இந்த சீசனில் சிறப்பாக கைகொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இப்போது அணியில் புவனேஸ்வர் குமார் இணைந்துள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

புவனேஸ்வர் குமார் நல்ல பார்மில் உள்ளதாகவும், நெருக்கடி நேரங்களில் அவரிடம் ஆலோசனை பெற்று தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய அணி தனக்கு குடும்பத்தை போன்றது என்றும், எப்போதும் தனக்கு ஆதரவாக அணி செயல்படுவதாகவும் நடராஜன் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக அதிக ரன்களை கொடுத்தாலும் அவர்கள் தன்னை தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை சென்னையில், தான் இதுவரை ஆடியதில்லை என்றும், இது முதல் முறை என்றும் குறிப்பிட்ட நடராஜன், தான் சேப்பாக்கத்தில் அதிகமான போட்டிகளை விளையாடியுள்ளதால் அங்கு விளையாடுவது சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்