'மேட்ச் முடிஞ்ச அப்புறம்... நடராஜனை தனியாக அழைத்து பேசிய தோனி!.. நட்டு கரியரில் திருப்புமுனை சம்பவம் அது'!.. முதல் முறையாக சீக்ரெட்டை உடைத்தார் நடராஜன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிக்குப் பின் தோனி கொடுத்த ஒரு முக்கியமான அட்வைஸ் தற்போது பெரிதும் உதவுவதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடராஜனின் அசத்தலான பவுலிங், சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்தது.

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய அனைத்து விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி, அனைத்து ஃபார்மட்டிலும் அசத்தி, இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவினார்.

இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக ஆடிய நடராஜன், ஐபிஎல் 14வது சீசனை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில், ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், கடந்த சீசனில் தோனி தனக்கு கூறிய அறிவுரை என்னவென்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய நடராஜன், கடந்த சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஒரு பந்தை ஸ்லாட்டில் பிட்ச் செய்தேன். அதை சிக்ஸர் விளாசினார் தோனி. அடுத்த பந்திலேயே தோனியை வீழ்த்தினேன். ஆனால், நான் தோனியின் விக்கெட்டை கொண்டாடவில்லை. அதற்கு முன் வீசிய பந்தை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.

அந்த போட்டிக்கு பின், தோனியுடன் பேசினேன். தோனியுடன் பேசுவதே பெரிய விஷயம் தான். அவர் ஃபிட்னெஸ் பற்றி என்னிடம் பேசியதுடன், என்னை உத்வேகமும் படுத்தினார். ஸ்லோ பவுன்ஸர்கள், கட்டர்கள் என நல்ல வேரியேஷனுடன் வீசுங்கள் என்றார். அது எனக்கு மிகவும் பயன்படுகிறது என்று நடராஜன் தெரிவித்தார்.

அதே போல ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதையும் தன்னால் மறக்க முடியாத தருணம் என அவர் சொல்லியுள்ளார்.

அதுகுறித்து பேசிய அவர், "ஒரு புறம் எனக்கு மகள் பிறந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சி. மற்றொரு புறம் முக்கியமான நாக் அவுட் போட்டியில் விக்கெட் வீழ்த்தினேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால், எனக்கு குழந்தை பிறந்ததை மற்றவர்களிடம் சொல்லவேயில்லை" என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்