'நீங்க பேட்ஸ்மேன் பக்கத்துலயே நின்னுக்கோங்க!.. ஓடுற வேல மிச்சமாகும்'!.. 'பந்து இன்னும் ரிலீஸ் கூட ஆகல'... 'ஒரு நியாயம் வேண்டாமா'?.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பந்து ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு ஓட தொடங்கிய பொல்லார்டின் செயல் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி பவர் ப்ளே முடிவில் 21 ரன்கள் மட்டும் குவித்து 1 விக்கெட் இழந்திருந்தது. மும்பை பேட்ஸ்மேன்களை பஞ்சாப் பவுலர்கள் திணற வைத்தனர். தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்த போது, கேப்டன் ரோகித் சர்மா 63 ரன்கள், சூரியகுமார் யாதவ் 33 ரன்கள் மற்றும் பொல்லார்டு 16 ரன்கள் குவித்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டும் குவித்தது.

பஞ்சாப் பவுலர்கள் முகமது ஷமி மற்றும் ரவி பிஸ்னோய் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்ட களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். பவர்பிளேவில் 46 ரன்கள் குவித்து விக்கெட் இழக்காமல் இருந்தனர்.

இதன்பிறகு, ராகுல் சஹார் ஓவரில் விக்கெட் இழந்து வெளியேறிய மயங்க் அகர்வாலுக்கு (25) பிறகு கிறிஸ் கெயில் களமிறங்கினார். ராகுல் மற்றும் கெயில் ஜோடி சேர்ந்து போட்டியை முடித்து வைத்தனர். ராகுல் 60 ரன்கள் மற்றும் கெயில் 43 ரன்கள் குவிக்க பஞ்சாப் அணி 17.4 ஒவரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இதன்மூலம் பஞ்சாப் அணி தற்போது 4 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் முதல் இன்னிங்சின் கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். அப்போது நான் ஸ்ட்ரைக்கராக இருந்த பொல்லார்டு முகமது ஷமி பந்தை போட்டுவதற்குள் கிரீஸை விட்டு வெளிவந்து ஒரு ரன் எடுக்க முயன்றார். பொல்லார்டின் இந்த செயலை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்