'கேக்காத காதுக்கு ஹெட்செட்டு... பாயாசம் குடிக்க பல் செட்டு'!.. 'அட கொடுமையே'!.. கதறும் ரசிகர்கள்!.. மும்பை இந்தியன்ஸை விரட்டும் பெரிய சிக்கல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணியின் சொதப்பல் ஓப்பனிங் குறித்து ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மாவுடன் இணைந்து க்றிஸ் லின் ஓபனிங் விளையாடினார். டீகாக் குவாரண்டினில் இருந்ததால் அவரால் முதல் போட்டியில் களம் இறங்க முடியவில்லை. இதன் காரணமாக லின்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அவரோ களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை ரன் அவுட் ஆக வைத்து விட்டார். எனினும், அவர் பொறுப்பாக விளையாடி 35 பந்துகளில் 49 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் சூரியகுமார் யாதவ் 31, இஷன் கிஷன் 28 அடிக்க மும்பை அணியால் வெறும் 159 தான் எடுக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி மும்பை அணி நிர்ணயித்த இலக்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி அடைந்தது.

அந்த போட்டி முடிந்தவுடன் டீ காக் நிச்சயமாக இனி அடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் இன்று டீ காக் நிச்சயமாக விளையாடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நடவடிக்கை இயக்குனர் ஜாஹீர் கான் கூறியிருந்தார்.

அவருக்கான தனிமை காலம் முடிந்துவிட்டது.குவாரண்டினில் இருந்து வெளியே வந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், இன்றைய போட்டியில் நிச்சயமாக அவர் களம் இறங்கப் போகிறார் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார்.

இன்று டீ காக் விளையாடப் போவது மும்பை ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாக அமைந்தது. எனினும், இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதைக்கண்ட ரசிகர்கள் இதற்கு க்றிஸ் லின்னே அணியில் விளையாடி இருக்கலாம் என்று கருத்துகளை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை அணியின் ஓப்பனிங்கிற்கு சரியான தேர்வு இன்னும் அமையாதது மும்பை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்