'நீ என்ன ஃபார்மல வேணாலும் இரு'!.. 'பவுலிங் போட்றது யாரு?.. எங்க தல பும்ராவ பாரு'!.. ராஜஸ்தானை கட்டிப்போட்ட கடைசி நிமிட மேஜிக்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பும்ரா மற்றும் ராகுல் சஹார் செய்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. 

அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக ஆடிய நிலையில், ராகுல் சஹார் அடுத்தடுத்து இருவரின் விக்கெட்டுகளையும் விழ்த்தினார். இருவரும் முறையே 41 மற்றும் 32 ரன்களில் அவுட்டாகினர். 

தொடர்ந்து பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் முறையே ஷிவம் தூபே மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட்டுளை வீழ்த்தினர். எனினும், அவர்களும் அவுட் ஆவதற்கு முன்னதாக 35 மற்றும் 42 ரன்களை அடித்துவிட்டுதான் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து, அந்த அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171ஆக இருந்தது. 

சென்னையில் ஆடிய 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார் பும்ரா. ஆர்சிபிக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும் அடுத்த 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார். அந்த பிட்ச் ஸ்லோ பந்துகளுக்கு சாதகமாக இருந்த நிலையில், தற்போது டெல்லி மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்றைய போட்டியில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தாலும் ரன்களை மிகவும் சுருக்கியிருந்தார் பும்ரா. 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். இதன் எகானமி ரேட் 3.75ஆக உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்