'அடிச்சாரு பாருய்யா சிக்ஸர்'!.. சொந்த ஊருக்கு திரும்பும் குழப்பத்தில் வெளிநாட்டு வீரர்கள்!.. கிறிஸ் லின் போட்டுக்கொடுத்த சூப்பர் ப்ளான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப கிறிஸ் லின் விடுத்துள்ள கோரிக்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருகின்றனர். கொரோனா தீவிரமடைவதால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிடும் என்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல வேண்டும் என கிளம்பி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகம். ஏற்கனவே ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் வெளியேறிய நிலையில் அடுத்ததாக வார்னர், ஸ்மித்தும் வெளியேறுவார்கள் எனக்கூறப்படுகிறது. 

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே சொந்த நாட்டிற்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகுமோ என்ற அச்சத்தில் இருவரும் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், மும்பை அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வீரர்களின் ஐபிஎல் ஊதியத்தில் 10% வாங்குகிறது. அந்த தொகையை ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு எங்களை சொந்த நாட்டிற்கு தனி விமானம் மூலம் அழைத்து வர உபயோகப்படுத்த வேண்டும். 

வெளியில் மக்கள் கொரோனாவால் கடும் அவதிப்படுவதை அறிவேன். ஆனால் நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயோ பபுளுக்குள் உள்ளோம். அடுத்த வாரம் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ள இருக்கிறோம். எனவே, நாங்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். ஆபத்துகளை அறிந்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், ஐபிஎல் முடிந்த பிறகு பாதுகாப்பாக தாயகம் திரும்பினால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்