'எவ்ளோ முட்டாள்தனமான விஷயம் 'இது'!.. 'நீங்க சூர்யகுமாருக்கு செஞ்சத... சேவாக்கிடம் செய்ய முடியுமா'?.. ரோகித்தை வெளுக்கும் ஜாம்பவான்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் படுமோசமாகச் சொதப்பியதால் அணி 150 ரன்களை கூட எட்டவில்லை. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர்கள் அஜய் ஜடேஜா, விரேந்தர் சேவாக் ஆகியோர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் துவக்க வீரர் குவின்டன் டி காக் ஆட்டமிழந்ததும், அணியின் ஸ்கோர் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் களத்திற்குள் வந்தார். இவர் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மும்பை அணி பவர் பிளே முடிவில் 21/1 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
தொடர்ந்து திணறி வந்த இஷான் கிஷன் 17 பந்துகளை எதிர்கொண்டு, 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால், மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 49/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெத் ஓவர்களில் அதிரடி காட்டக் கூடிய கெய்ரன் பொல்லார்ட், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா போன்றவர்களும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 131/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ரோஹித் ஷர்மா 63 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் அடித்திருந்தார்கள்.
இந்நிலையில், தற்போது இதுகுறித்துப் பேசிய சேவாக், சூர்யகுமாரை மூன்றாவது இடத்தில் களமிறக்காததுதான் ஸ்கோர் உயராமல் இருந்ததற்கு காரணம். அடுத்த போட்டியில் இதே தவறை செய்யக் கூடாது என்றார்.
"கடந்த போட்டிகளில் சூர்யகுமார் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அரை சதம் அடித்திருக்கிறார். இவரைப் பஞ்சாப் அணிக்கு எதிராக முன் கூட்டியே களமிறங்கியிருந்தால் பவர் பிளேவில் ரன் மழை பொழிந்திருப்பார். ஆனால், எதற்காக இஷான் கிஷனை முன்கூட்டியே அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த போட்டிகளில் இதே தவறை செய்யக் கூடாது" எனத் தெரிவித்தார்.
அடுத்துப் பேசிய அஜய் ஜடேஜா, சேவாக் கூறியதை சரி என்றார். "சூர்யகுமாரை முன் கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும். இடத்தை மாற்றிக் களமிறக்கப்படுவதால் பேட்ஸ்மேனுக்கு மனதளவில் பிரச்சினை ஏற்படும். இதனால், அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாத நிலை கூட ஏற்படலாம். இதே, விரேந்தர் சேவாக்கிடம் நீங்கள் ஓபனிங் களமிறங்க வேண்டாம் எனக் கூற முடியுமா? அப்படிக் கூறினால் என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும். அது பெரிய பிரச்சினையில்தான் போய் முடியும்" எனக் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏப்ரல் 29ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எப்படி சார் உங்களால பவுலிங் போடாம இருக்க முடியுது?.. என்னமோ நடக்குது... உண்மைய சொல்லுங்க'!.. உணர்ச்சி வசப்பட்ட பாண்டியா!!
- 'வாழ்வா... சாவா போராட்டம்'!.. 'இந்த ரிஸ்க் எடுக்க நீங்க தயாரா'?.. ராஜஸ்தான் அணிக்கு உள்ள கடைசி வாய்ப்பு!.. பீட்டர்சன் ஐடியா சாத்தியமா?
- 'யாரு பெருசுனு அடிச்சு காட்டு'!.. சிஎஸ்கே - ஆர்சிபி ரசிகர்கள் இடையே டிஜிட்டல் போர்!.. கதிகலங்கும் இணையம்!.. கூட்றா பஞ்சாயத்த!!
- 'அவர டீம்ல இருந்து தூக்குனீங்கனா... அவ்ளோ தான் சொல்லிட்டேன்'!.. 'அவர எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா'?.. பஞ்சாப் அணிக்கு பாடம் எடுத்த கம்பீர்!!
- வெளிநாட்டு வீரரிடம் ‘சைலண்டா’ பேச்சுவார்த்தை நடத்திய ராஜஸ்தான்.. ‘கசிந்த தகவல்’.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- ஏங்க 'அவரெல்லாம்' 16 கோடிக்கு 'வொர்த்தே' இல்லங்க...! 'இதனால அவருக்கு தான் பெரிய தலைவலி...' 'வேணும்னா 2 மேட்ச் அடிப்பாரு பாருங்க...' - வெளுத்து வாங்கிய பீட்டர்சன்...!
- ‘வெளிப்படையா சொல்லணும்னா, நாங்க அதை தவறவிட்டுட்டோம்’!.. தோல்விக்கு பின் சஞ்சு சாம்சன் சொன்ன பதில்..!
- 'அடிச்ச சதம் மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியும்!.. அதுக்கு பின்னாடி இருந்த ரண வேதனை'... பேச பேச உணர்ச்சி வசப்பட்ட படிக்கல்!!
- நான் மறுபடியும் வரேன்...! கொரோனா 'அவருக்கு' சரி ஆயிடுச்சாம்...! 'மீண்டும் டெல்லி அணியில் இணையும் வீரர்...' 'ஆகா இனி தாரைதப்பட்டை கிழிய போகுது...' - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!
- VIDEO: ‘பாய் தைரியமா கேளுங்க’!.. ரொம்ப கான்ஃபிடண்டா சொன்ன சிராஜ்.. 4-வது ஓவரில் நடந்த சுவாரஸ்யம்..!