'ரோஹித் சொல்லிதான் அனுப்பினாரு'... 'போட்டிக்குப் பின்னும் தெறிக்கவிட்ட'... 'சூர்யகுமார் யாதவின் மாஸ் பேச்சு!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்ய குமார் யாதவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 79 ரன்கள் எடுத்து  அசத்தினார். அவரை இந்திய அணியில் எடுக்காத தேர்வு குழுவிற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று அவருடைய ஆட்டம் இருந்ததாக ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதிலும் நேற்று மைதானத்தில் யாதவிற்கும் கோலிக்கும் இடையே பல முறை உரசல்கள் ஏற்பட்டது. கோலி இவரை முறைப்பதும், சூர்யா குமார் பதிலுக்கு கோலியை முறைப்பதும் மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது .

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் பேசியுள்ள சூர்ய குமார் யாதவ், "நான் போட்டியை முடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு இருந்தேன். என்னுடைய ஆட்டம் எது என்பதை கற்றுக்கொள்ள முயன்றேன். போட்டியை முறையாக முடித்தது சந்தோசம் தருகிறது. போட்டிக்கு இடையே மெடிடேஷன் செய்தது எனக்கு பெரிய அளவில் உதவியது. சாஹல் ஓவரில் ஓவர் கவர் திசையில் அடித்ததும், ஸ்டெயின் பந்தில் பேக் புட் ஷாட்டும் இந்த போட்டியிலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஷாட்.

லாக்டவுன் நேரத்தில் என்னுடைய ஆட்டம் மீது நான் கவனம் செலுத்தினேன். இதற்கு முன் ஆன் சைட் பகுதியில் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று போட்டியை மொத்தமாக முடித்து கொடுத்தது சந்தோசம் கொடுக்கிறது. மூன்றாவது இடத்தில் இறங்கி ஆடுவது சந்தோசம் அளிக்கிறது. அணி நிர்வாகமும், ரோஹித் சர்மாவும் என்னிடம் இதை பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறார்கள். நீ நிறைய போட்டிகளில் ஆடி இருக்கிறாய். உனக்கு அனுபவம் இருக்கிறது. நீ நினைத்தால் இன்னும் ஆழமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். நீ போய் விளையாடு என்று கூறினார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

யாதவின் இந்தப் பேட்டியில் அவர் கூறிய சில விஷயங்கள் மறைமுகமாக விராட் கோலியை சாடும்விதமாக சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக என்னை இதுபோல் ஆடும்படி ரோஹித் சர்மா கூறினார் எனவும், எனக்கு அனுபவம் இருப்பதாக ரோஹித் சர்மா கூறினார் எனவும் சூர்ய குமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இருக்கும் 14 வருட அனுபவத்தையும், ரோஹித் சர்மா கொடுக்கும் ஊக்கத்தையும் குறிப்பிட்டுள்ள சூர்ய குமார் யாதவ் அதன்மூலம் கோலியை சீண்டியதாகவே கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்