'அப்போ அதெல்லாமே உண்மைதானா?!!'... 'மீண்டும் வெடித்த சர்ச்சை!!!'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவின் செய்கை ஒன்று மீண்டும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே நீண்ட காலமாகவே பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவர்கள் இருவரும் களத்தில் அப்படி எதுவுமே இல்லை என்பது போல இயல்பாகவே இருந்தனர். இருப்பினும் அவர்களிடையே பனிப்போர் நிலவி வருவதாகவும், ஓய்வறையில் இருவருக்கும் தனித்தனியே ஆதரவாளர்கள் இருப்பதாகவே தகவல்கள் பரவின.

இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் செய்கை அந்த சர்ச்சைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாதது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதன்பின்னர் நடந்த ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் சூர்யகுமார் யாதவை விராட் கோலி முறைத்தது சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து தற்போது விராட் கோலியை பேப்பர் கேப்டன் எனக் கிண்டலடித்து பகிரப்பட்ட மீம்ஸ் ஒன்றை சூர்யகுமார் லைக் செய்துள்ளது மீண்டும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரோஹித் ஷர்மாவை உயர்த்திக் கூறுமாறு பகிரப்பட்ட அந்த மீம்ஸை அவர் லைக் செய்ததற்கு ரசிகர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் விராட் கோலி - ரோஹித் ஷர்மா ஏதோ பிரச்சனை உள்ளதென்பதை உறுதிப்படுத்தும் விதமாக இது உள்ளதாக ரசிகர்கள் கூறிவந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அந்த மீம்ஸை டிவிட்டரில் அன்லைக் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது இதுபோன்ற செயல்களால் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் சிரமமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்