'இந்தியாவில் இருந்து தப்பிக்க... புது ரூட்டை கண்டுபிடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்'!.. அடுத்து காத்திருந்த ட்விஸ்ட்!.. ஐபிஎல்லுக்கு இப்படி ஒரு நிலைமையா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் பபுளில் இருந்து தப்பி மாலத்தீவில் பதுங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள், ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள் என பலரும் தொடரை விட்டு விலகி சொந்த நாட்டை நோக்கி படை எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக இருந்து வந்தார். தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா அச்சுறுத்தலால் அவர் திடீரென பபுளில் இருந்து வெளியேறினார். ஆனால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. மாறாக மாலத்தீவுக்கு சென்று அங்கு முகாமிட்டுள்ளார். இதற்கு காரணம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததே ஆகும்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் மே 15ம் தேதி ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆஸ்திரேலியர்களாக இருந்தாலும் 15ம் தேதி வரை நாட்டுக்குள் வரக்கூடாது. கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களுக்கு தனி விமானமும் ஏற்பாடு செய்ய முடியாது என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அனுமதி கிடைக்காதது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மைக்கேல் ஸ்லாட்டர், ஆஸ்திரேலிய அரசு உண்மையில் தனது குடிமக்களின் பாதுகாப்பை விரும்பினால், ஆஸ்திரேலியர்களை வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ஆனால், இது அவமானமாக உள்ளது. பிரதமர் ஸ்காட் எந்த தைரியத்தில் இப்படி செய்கிறார். அவரின் முடிவால் அவர் கைகள் ரத்தக்கறை ஆகி வருகிறது என்பதை உணர வேண்டும். நான் ஆஸ்திரேலிய அரசின் அனுமதியுடன் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்தேன். ஆனால், தற்போது என்னை அந்த அரசே ஏற்க மறுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இவரைப் போன்றே ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். விமான போக்குவரத்து விஷயத்தில் ஆஸ்திரேலிய அரசு கைவிரித்து விட்டதால் அவர்கள் வேறு வழியின்றி அணிகளின் பயோ பபுளில் இருந்து வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக வெளியேறும் எண்ணத்தில் தான் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்று கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கும், சிஎஸ்கே அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பஸ் க்ளீனர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்பதிலேயே சிக்கல் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாடு இருக்குற நெலமைக்கு... ஐபிஎல் ரொம்ப முக்கியமா'?.. கிரிக்கெட் வீரர்கள் பதற்றம்!.. 'ரத்து செய்யப்படுகிறதா ஐபிஎல்'?.. பிசிசிஐ தீவிர ஆலோசனை!
- ‘உங்களை இப்படி பார்க்க முடியல’!.. நொறுங்கிப் போன ரசிகர்கள்.. வார்னருக்காக ‘குரல்’ கொடுத்த முன்னாள் வீரர்..!
- "முடிந்தது டேவிட் வார்னரின் அத்தியாயம்!.. ஒரே நாளில் புரட்டிப்போட்ட அந்த ஒரு சம்பவம்"!.. ஸ்டெயின் வெளியிட்ட அதிரவைக்கும் தகவல்கள்!
- VIDEO: ‘ரோஹித்தை அவுட்டாக்க மாஸ்டர் ப்ளான்’!.. கண்ணாலயே சிக்னல் கொடுத்த ‘தல’.. ‘செம’ வைரல்..!
- ‘முக்கியமான நேரத்துல மூத்த வீரர் பண்ண அந்த தப்பு’!.. எங்கே கோட்டைவிட்டது சிஎஸ்கே?.. தோல்விக்கு தோனி சொன்ன முக்கிய காரணம்..!
- 'அடப்பாவிங்களா... அவுட் இல்லயா'?.. ரன் அவுட் ஆகியும் நாட் அவுட்டான டு ப்ளசிஸ்!.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்!!
- VIDEO: 'இப்ப எதுக்கு இந்த over scene?.. அடடடா இவரோட அலப்பறை தாங்க முடியல'!.. சர்ச்சையில் சிக்கிய க்ருணால் பாண்டியா!.. வைரல் வீடியோ!!
- 'ப்ரோ... ஆர்ம்ஸ் பாத்தீங்களா?.. பழனி படிக்கட்டு மாதிரி சிக்ஸ் பேக் பாடி'!.. 'நாங்க மட்டும் என்ன சும்மாவா?.. கெயிலுக்கு போட்டியாக ஜெர்சியை கழட்டிய சஹால்!
- பறிபோனது டேவிட் வார்னரின் கேப்டன் பதவி!.. ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடி முடிவு!.. என்ன நடந்தது?
- 'என்ன நெனப்புல ஆடுறீங்க'?.. 'திரும்ப திரும்ப ஒரே தவறை செய்த படிக்கல்'!.. களத்திலேயே காண்டான கோலி!