"நல்லா பண்ணீங்க தம்பி... ஆனா, நமக்கு இல்ல"... 'எதிரணியை மோசமான சாதனையிலிருந்து காப்பாற்றி'... 'படுமோசமான சாதனை படைத்த இளம்வீரர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஹைதராபாத் அணி வீரர் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த சீசனில் இதுதான் வேகப் பந்துவீச்சாளரான சித்தார்த் கவுலின் முதல் போட்டியாகும்.
இந்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கம் முதலே ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்தது. சித்தார்த் கவுல் தன் முதல் ஓவரிலேயே 19 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் அவுட் ஆக, அடுத்து விளையாடிய க்ருணால் பாண்டியா கடைசி நான்கு பந்துகளில் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து 20 ரன்கள் சேர்த்தார். அந்த கடைசி ஓவரில் மட்டும் சித்தார்த் 21 ரன்கள் கொடுத்தார். இதையடுத்து முக்கியமான 2 விக்கெட் வீழ்த்தியுள்ள போதும், மோசமான பந்துவீச்சில் முதல் இடத்தை பெற்றுள்ள சித்தார்த் கவுல் 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்துள்ளார்.
இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஷார்ஜாவில் 4 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து இந்த சீசனின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார். இதன்மூலம் அவருடைய மோசமான சாதனையை சித்தார்த் முறியடித்துள்ளார். ஐபிஎல் 2020இல் ஷார்ஜாவில் 200 ரன்கள் எட்டாத முதல் அணியாகும் ஆபத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் சித்தார்த் கவுலின் ஓவர்களால் 208 ரன்கள் எடுத்து அதிலிருந்து தப்பித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சிலருக்கு மட்டும் வயசு வெறும் நம்பர் தான்... ஆனா இன்னும் சிலருக்கு?!!"... 'இவரா இப்படி பேசறாரு??'... 'அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...
- "ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயற்சியா?!!!"... 'பிளேயரின் புகாரால் பரபரப்பு'... 'விசாரணையை தொடங்கியுள்ள பிசிசிஐ!'...
- "இதுலதான் திணறிட்டு இருந்தாங்க, ஆனா இனி"... 'போட்டோவுடன் குட் நியூஸ் சொன்ன டீம்'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள அறிவிப்பு!!!'...
- சிஎஸ்கே மேல அப்டி என்ன ‘கோவம்’.. ஏன் சேவாக் ‘அப்டி’ சொன்னாரு..? பரபரப்பை கிளப்பிய அந்த வார்த்தை..!
- ‘சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா’!.. கேப்டனை வேர்த்து விறுவிறுத்துப்போக வச்ச ‘அந்த’ வீரர் யார்..?
- Watch: லட்டு மாதிரி கெடச்ச ‘வாய்ப்பு’.. இப்டி கோட்ட வீட்டீங்களே பாஸ்..!
- Watch: ‘140 கிமீ’ வேகத்துல வந்த பந்து.. நெஞ்சுல அடிச்சு ‘சுருண்டு’ விழுந்த வீரர்..!
- நேத்து ‘மூச்சுவிட’ கஷ்டப்பட்டதுக்கு காரணம் இதுதானா..? தோனி கொடுத்த விளக்கம்..!
- “நல்ல ஃபினிஷரும் இல்ல, பெரிய ஹிட்டரும் இல்ல.. எதுக்குமே உதவாதவர போயி”.. ட்விட்டரில் மோதிக்கொண்ட ஆகாஷ் சோப்ராவும்.. ஆல்ரவுண்டரும்!
- ‘தல’ய இப்டி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. உருகும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு தோனிக்கு..?