ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மெகா ‘ஐபிஎல்’ ஏலம்.. எப்போ, எங்கே நடக்கப்போகுது தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள தேதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மெகா ‘ஐபிஎல்’ ஏலம்.. எப்போ, எங்கே நடக்கப்போகுது தெரியுமா..?
Advertising
>
Advertising

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை அடுத்து ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.

IPL mega auction likely to be held in Bengaluru on Feb 7,8

இதனிடையே ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன.

IPL mega auction likely to be held in Bengaluru on Feb 7,8

இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது பெங்களூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, IPL2022, IPLAUCTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்