எங்களுக்கு 'வேற' வழி தெர்ல... ஐபிஎல்ல 'இப்டித்தான்' நடத்தப்போறோம்... அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ?... 'கசிந்த' ரகசியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை மூடப்பட்ட மைதானத்திற்குள் பிசிசிஐ நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உச்சபட்சமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்று திரும்பத்திரும்ப பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் எடுத்துரைத்து வருகின்றன. இதனால் இந்தியாவில் தற்போது விளையாட்டு போட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2 மாதங்கள் வரை நடைபெறும் போட்டி என்பதாலும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்வதாலும் இந்த போட்டியை தள்ளி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஒவ்வொரு போட்டியையும் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் நாளை (14.3.20) பிசிசிஐ குழு ஐபிஎல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய முடிவினை எடுக்கவிருக்கிறது. போட்டியை நிறுத்தி வைத்தால் சுமார் 2000 ஆயிரம் கோடி வரையில் நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரை போட்டியை திட்டமிட்ட தேதியில் நடத்தி முடிக்கும் வழிகளை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் மூடிய மைதானத்திற்குள் ஐபிஎல் போட்டியை நடத்திட பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், '' ஐபிஎல் போட்டிகளை நாங்கள் திட்டமிட்டபடி ரசிகர்கள் இல்லாமல் நடத்த இருக்கிறோம்,'' என தெரிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை டிவியில் பார்த்து ரசிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் குறித்த இறுதி முடிவினை நாளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே!
- 'கை தட்டல்கள்', 'ஆரவாரங்கள்' இல்லாமல் ... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ... முதல் முறையாக நடந்த சம்பவம் !
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'ரசிகர்கள்' இல்லாமல் நடைபெறவுள்ள 'இந்தியா - தென்னாபிரிக்கா' போட்டி ?
- 'பல்லாயிரம்' மக்கள் திரண்டிருந்த மைதானம் ... ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா ...
- 'அங்க' தான் பிளான் பண்ணாம 'தோத்தீங்க' இங்கேயுமா?... 'தாறுமாறாக' வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
- 'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
- சும்மா ‘இதையே’ ஊதி பெருசாக்குறாங்க... நான் இதுக்கெல்லாம் ‘கவலை’ படமாட்டேன்... ‘எரிச்சலான’ பிரபல இந்திய வீரர்...
- ‘இவங்க’ எல்லாம் ‘இல்லாம’ எப்படி?... மத்திய அரசின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘ஐபிஎல்’ போட்டிகளுக்கு எழுந்துள்ள ‘புதிய’ சிக்கல்...
- 'செல்பி' எடுக்காதீங்க, யாரையும் தொடாதீங்க ... 'ஒரு நாள்' போட்டிக்கு முன்னதாக ... வழிமுறைகளை வகுத்த 'பிசிசிஐ' !
- 'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?