'நான் இருக்கப்போ அது நடந்துடுமா?!!'... 'சொல்லி அடித்த பிரபல வீரர்!'... 'மொத்த ஐபிஎல்கே இவர்தான் Script போல!!!'... 'ஸ்டன்னாகி நிற்கும் ரசிகர்கள்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்த ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அபுதாபியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதிய முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் 99 ரன்கள் குவிக்க, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த அணி 185 ரன்கள் எடுத்தது. கெயில் சதம்  அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெயில் 99 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடுப்பில் பேட்டை தூக்கி வீசிய கெயில் பின் ஜோப்ரா ஆர்ச்சருடன் கை குலுக்கிவிட்டு சென்றார்.

அதன்பிறகு பேசிய கெயில், "180 நல்ல ஸ்கோர் என நினைக்கிறேன். 99 ரன்களில் அவுட்டானது துரதிருஷ்டமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சிதான்" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் தற்போது ஜோப்ரா ஆர்ச்சர் செய்த பழைய ட்வீட் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. 2013ஆம் ஆண்டு பகிரப்பட்ட அந்த ட்வீட்டில், "நான் பவுலிங் போட்டிருந்தால் அவரை 100 ரன்கள் எடுக்க விட்டிருக்க மாட்டேன்" என ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல 2016ஆம் ஆண்டு பகிர்ந்த இன்னொரு ட்வீட்டிலும், "கிறிஸ் கெயில் அவர்களே சதம் அடிக்க நினைத்து உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த பழைய ட்வீட்டுகளால் ஷாக்கான ரசிகர்கள் ஐபிஎல் ஸ்கிரிப்டே இவருடைய ட்வீட்டுகளை வைத்துதான் எழுதப்படுகிறது என ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர். இப்படி நடப்பது இது முதல்முறை அல்ல என்பதும், முன்பே இதுபோல ஆர்ச்சரின் பல பழைய ட்வீட்டுகள் அப்படியே நடந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்