'நேத்தும் களத்தில் தொடர்ந்து கேட்ட தமிழ்'... 'ஆனா அங்கதான் டிவிஸ்ட்டே?!!'... 'பேசினது அவரு இல்ல!!!'... 'வைரலாகும் சுவாரஸ்ய சம்பவம்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று வைரலாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. தற்போதுவரை ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன. இதனால் பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் பிளே ஆப் செல்வதற்கான மோதல் கடுமையாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் வருண் சக்ரவர்த்தி, நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், முருகன் அஸ்வின் என இளம் தமிழக வீரர்கள் பலர் கலக்கி வருகின்றனர். இதையடுத்து மூத்த தமிழக வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்றோர் இளம் வீரர்களுடன் விளையாடும்போது பல நேரங்களில் தமிழில் பேசிக்கொள்வது வழக்கமாக உள்ளது.

அதிலும் முன்னதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சக வீரர் வருண் சக்கரவர்தியுடன் தமிழில் பேசியது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் தமிழகத்தை சேராத இரண்டு வீரர்கள் தமிழில் பேசிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. ஆம் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், கர்நாடகாவை சேர்ந்த ஷ்ரேயாஸ் கோபால் இருவரும் நேற்று களத்தில் தமிழில் பேசிக்கொண்டனர்.

இவர்கள் இருவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிவரும் நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் கோபால் பவுலிங் செய்த போது கீப்பிங் செய்து கொண்டு இருந்த சஞ்சு சாம்சன் தமிழில் பேசினார். நீ இப்படி போடு மச்சி, பந்தை உள்ளே போடு, நல்ல டைம் எடுத்து போடு எனத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் கோபாலுக்கு தமிழில் அறிவுரை வழங்கினார். இரண்டு பேருமே வேறு வேறு மாநிலம் என்றாலும் இணைப்பு மொழியான தமிழில் பேசிக்கொண்டது வைரலாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்