பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு??.. "நல்லா இருக்கே உங்க கத.." மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான மெகா ஏலம், கடந்த வாரத்திற்கு முன்பாக, பெங்களூரில் வைத்து நடைபெற்றிருந்தது.
அனைத்து அணிகளும் சிறந்த வீரர்கள் பலரை, சொந்தாமாக்கியுள்ள நிலையில், ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஐபிஎல் தொடர்
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. அதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்றின் காரணமாக, முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து தான் நடைபெற்றிருந்தது.
ஐபிஎல் போட்டிகள்
இந்நிலையில், இந்த முறை அனைத்து போட்டிகளும், இந்தியாவில் தான் நடைபெறும் என்பதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதனால், 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு, முழுமையாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் இது தான் என்றும் கூறப்படுகிறது. மொத்தமுள்ள 70 போட்டிகளில், 55 போட்டிகள், மும்பையின் மூன்று மைதானங்களான வான்கடே, ப்ராபவுர்ன் மற்றும் DY பாட்டில் மைதானங்களிலும், மீதமுள்ள 15 போட்டிகளை புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற அணிகளுக்கு சிக்கல்?
பிசிசிஐயின் இந்த முடிவால், மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, முதல் பாதி போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றிருந்த போது, எந்த அணிக்கும் ஹோம் மைதானங்களில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் தகவல் தான், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணியின் கோட்டை
ப்ராபவுர்ன் மற்றும் DY பாட்டில் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடுவது கூட தங்களுக்கு பிரச்சனை இல்லை என்றும், வான்கடே மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போட்டிகள் இருந்தால், நிச்சயம் அது மற்ற அணியினருக்கு தலைவலியாக இருக்கும் என்றும் ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஐபிஎல் அட்டவணை
மற்ற 9 அணிகளுக்கு, தங்களுடைய ஹோம் மைதானங்களில் ஆட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையான வான்கடே மைதானத்தில் அவர்கள் ஆட நேர்ந்தால், நிச்சயம் அந்த அணிக்கு மட்டும் பெரிய அளவில் சாதகமாக இருக்கும் என்பதே மற்ற அணியினரின் எதிர்ப்பாக உள்ளது.
மற்ற அணிகளின் முடிவு பற்ற ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் அதே வேளையில், ஐபிஎல் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்த மைதானத்தில் போட்டிகள் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'Retired' ஆன அன்னைக்கி தோனி சொன்ன விஷயம்.." 'சிஎஸ்கே' வீரர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'சீக்ரெட்'
- "பிசிசிஐ கேட்டாலும் சொல்ல மாட்டேன்.." வாயடைக்க வைத்த சஹா.. "அப்படி என்ன தான்பா பிரச்சனை?"
- ஐபிஎல் ஏலத்தை நிறுத்துங்க.. பேரம் பேச வீரர்கள் என்ன கால்நடைகளா?" – சி.எஸ்.கே வீரர் கோரிக்கை
- சிஎஸ்கேவுக்கு காத்திருக்கும் தலைவலி?.. தோனி என்ன செய்ய போறாரு?.. குழப்பத்தில் ரசிகர்கள்
- "பாப் டு பிளஸ்ஸிஸ் நமக்கு வேணும்.." 'CSK' கிட்ட இருந்து பிரிக்க, 'RCB' போட்ட மாஸ்டர் பிளான்?
- "இன்னும் நம்பவே முடியல.." சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ.. ரெய்னாவை நினைத்து மனம் உருகிய ரசிகர்கள்
- "எனக்காக மும்பையும் (MI) சென்னையும் (CSK) சண்டை போட்டது தான் என் வாழ்க்கைல BEST MOMENT!" - இளம் வீரரின் வைரல் பேச்சு
- இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு? .. இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. அடுத்த பாஸ்ட் பவுலரும் ரெடி!
- RCB டீம்ல இவ்ளோ பெரிய மிஸ்டேக் இருக்கே.. இதை யாராவது கவனச்சீங்களா.. தவறை சுட்டிக்கட்டிய ஆகாஷ் சோப்ரா..!
- "இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை... இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துருக்கனும்" - மிகவும் வருத்தப்பட்ட மேக்ஸ்வெல்! என்ன காரணம்?