'நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!.. யாருங்க இவரு'!?.. இளம் வீரரின் திறமையை பார்த்து... வாயடைத்துப்போன ரிஷப் பண்ட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு இந்திய அணியில் இன்னும் அறிமுகமாகலே டெல்லி அணியின் வீரர் ஒருவர் சர்வதேச தரத்தில் விளையாடுவதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 13வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியின் ஸ்கோரை 137க்கு சுருட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 19.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை பூர்த்தி செய்தது.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி சென்னை மைதானத்தில் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.
மும்பை அணியின் 138 இலக்கை சேஸிங் செய்யும் விதமாக டெல்லி வீரர்கள் ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாடி, அவுட்டான நிலையில், 4வது இடத்தில் ரிஷப் பண்ட் களமிறங்கி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிஷப் பண்ட் போட்டியின்போது பேட்டிங் லைனை திடீரென மாற்றினார். ரிஷப் பண்ட்டுக்கு முன்னதாகவே களமிறங்கிய இளம்வீரர் லலித் யாதவ், அவுட்டாகாமல் 25 பந்துகளில் 22 ரன்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
மேலும், 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், லலித் யாதவ் இந்திய அளவில் சிறப்பான வீரர் என்று தான் கருதுவதாகவும் அவரது திறமையை மெருகேற்ற தாங்கள் விரும்புவதாகவும் பண்ட் தெரிவித்துள்ளார். அவர் தங்களுக்காக பல அதிசயங்களை செய்வார் என்றும் பண்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்றைய ஆட்டத்தில் மிஸ்ராவின் பங்களிப்பு குறித்தும் பண்ட் பாராட்டு தெரிவித்துள்ளார். போட்டியை துவங்க ஆரம்பித்தபோது நெருக்கடியை உணர்ந்ததாகவும் ஆனால் தங்களை இலகுவாகவும் சிறப்பாகவும் அமித் மிஸ்ரா உணர வைத்ததாகவும் பண்ட் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அப்பாடா..! ஒரு வழியா ஹைதராபாத் அணி ‘அதை’ செஞ்சிட்டாங்க.. கூடவே யாரும் எதிர்பார்க்காத ஒரு ‘ட்விஸ்ட்’-யையும் வச்சிட்டாங்க..!
- 'இருக்குற இடம் தெரியாம... இருந்துட்டு போயிடலாம்னு பாத்தா... விட மாட்றாங்களே'!.. தொடர்ந்து சொதப்பல் ஆட்டம்!!.. வசமாக சிக்கிய சிஎஸ்கே பவுலர்!
- பாவமா இருக்குங்க...! ஏன் இப்படி கஷ்டப்படுறாரு...? 'பேசாம போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல...' - தோனி குறித்து லெஜண்டரி பேட்ஸ்மேன் ஆதங்கம்...!
- ‘சிஎஸ்கே வீரர் சொன்ன அதே காரணம்’!.. திடீரென விலகிய முக்கிய வீரர்.. ராஜஸ்தான் அணிக்கு வந்த சோதனை..!
- 'இவர் கிட்ட என்ன இல்ல?.. எல்லா தகுதியும் இருக்கு!.. சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக இவரு தான் வரணும்'!.. கொளுத்திப் போட்ட மைக்கேல் வாகன்!
- 'என் வழி... தனி வழி'!.. மும்பை அணியின் டாப் பேட்ஸ்மேன்களை... கொத்தாக தூக்கியது எப்படி?.. அமித் மிஸ்ராவின் பிரத்யேக ஸ்கெட்ச்!.. அதிரவைக்கும் பின்னணி!
- 'இவருக்காக நல்லா ஆடிட்டிருந்த ப்ளேயர உட்காரவச்சாங்க!.. இவர் என்ன கொஞ்சம் கூட நிலைம புரியாம இருக்காரு'!.. சுக்கு நூறாக சிதறிய மும்பையின் ப்ளான்!
- ‘ரோஹித் பண்ண தப்பை அப்படியே செஞ்ச ஹர்திக்’!.. ஒரே ஓவரில் எல்லாமே ‘தலைகீழா’ மாறிடுச்சு..!
- அவங்கள 'அப்படியெல்லாம்' குறைச்சு மதிப்பிட முடியாது...! 'அந்த விஷயத்துல' எங்கள விட ஒருபடி மேல இருக்காங்க...! - புகழ்ந்து தள்ளிய சூர்யகுமார் யாதவ்...!
- 'கே.எல்.ராகுல் ரொம்ப கன்ஃபியூஸ் ஆகுரார்னு தோணுது...' 'அந்த விசயத்துல' மட்டும் ரொம்ப தப்பு பண்ணிட்டாரு...! - விளாசி தள்ளிய ஆஷிஸ் நெஹ்ரா...!