'என் வழி... தனி வழி'!.. மும்பை அணியின் டாப் பேட்ஸ்மேன்களை... கொத்தாக தூக்கியது எப்படி?.. அமித் மிஸ்ராவின் பிரத்யேக ஸ்கெட்ச்!.. அதிரவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா சிறப்பாக செயல்பட்டு 4 முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் கீரன் பொல்லார்ட் என அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளும் மும்பையின் முக்கிய விக்கெட்டுகள்.
இதையடுத்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து திக்கித் திணறி மும்பை வீரர்கள் 137 ரன்களை மட்டுமே அடிக்கனர். மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து சென்னை பிட்ச்சில் தனது 4வது போட்டியை விளையாடி வருகிறது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியை இன்றுதான் துவங்கியுள்ளது.
எனினும், அதன் வீரர்கள் சென்னை பிட்ச்சிற்கு ஏற்றவகையில் தங்களை தயார்படுத்திக் கொண்டு சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மிஸ்ரா 4 விக்கெட்டுகளை தனது 4 ஓவர்களில் அடுத்துடுத்து வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இந்த ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார்.
தான் எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்துவது குறித்தே சிந்தித்து வருவதாகவும் சரியான இடங்களில் பௌலிங் செய்ய முயற்சிப்பதாகவும் மிஸ்ரா கூறியள்ளார். எப்போது டி20 போட்டிகளில் பௌலிங் செய்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடைய பௌலிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் தன்னுடைய வலிமையை பயன்படுத்தி பந்துவீச முயற்சிப்பதாகவும் மிஸ்ரா கூறியுள்ளார். அணியில் சிறப்பான பேட்டிங் அட்டாக் உள்ள நிலையில், தன்னுடைய வேலை முடிந்து விட்டதாகவும் தற்போது பாண்டிங்கின் வேலை துவங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கே.எல்.ராகுல் ரொம்ப கன்ஃபியூஸ் ஆகுரார்னு தோணுது...' 'அந்த விசயத்துல' மட்டும் ரொம்ப தப்பு பண்ணிட்டாரு...! - விளாசி தள்ளிய ஆஷிஸ் நெஹ்ரா...!
- அன்றே கணித்த ‘தல’!.. திடீரென வைரலாகும் ‘8 வருட’ பழைய ட்வீட்.. அப்படி என்ன சொல்லி இருந்தார் தோனி..?
- '3 மேட்ச்லயும் செம்ம சொதப்பல்!.. எதுக்காக அவர ஓப்பனிங் இறக்குறீங்க'?.. கொதிக்கும் ரசிகர்கள்!.. ருத்துராஜ் குறித்து... மௌனம் கலைத்த சிஎஸ்கே!!
- VIDEO: ஏய்..! ‘இந்த மாதிரி நேரத்துலயா இப்டி கோட்ட விடுவீங்க’.. உச்சக்கட்ட கோபத்தில் கத்திய மோரிஸ்..!
- ‘டீமோட இதய துடிப்பே அந்த 2 பேர்தான்’.. ‘அவங்க மட்டும் அவுட்டாகிட்டா, ICU-ல இருக்குற மாதிரிதான் டீம் இருக்கும்’.. கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!
- 'நாங்க பழைய தோனிய எப்பதான் பார்க்குறது'?.. ரசிகர்கள் ஆதங்கம்!.. விடாப்பிடியாக இருக்கும் சிஎஸ்கே!.. இந்த சிக்கலுக்கு ஒரு முடிவே இல்லயா?
- தனி ஆளாக ‘கெத்து’ காட்டிய சின்னப்பையன்.. ‘தல’, ‘சின்ன தல’-யே இவரோட ஓவர்ல விளையாட திணறிட்டாங்க.. யார் இந்த சக்காரியா..?
- 'மொதல்லையே நான் ப்ளான் பண்ணிட்டேன்...' 'எப்படி மூணு விக்கெட் என்னால எடுக்க முடிஞ்சுதுன்னா...' - சீக்ரெட் உடைத்த மொயின் அலி...!
- 'அவசர அவசரமாக ஓடிவந்த டு பிளசிஸ்!.. சாம் கரனை அழைத்து... தனியாக பேச்சுவார்த்தை'!.. மேட்ச்சை புரட்டிப் போட்ட சம்பவம்!!
- ‘24 வயசுலயும் சரி இப்பவும் சரி, அதுக்கு மட்டும் உத்தரவாதம் கொடுக்கவே முடியாது’!.. வெளிப்படையாக பேசிய ‘தல’ தோனி..!