'தம்பி... நான் சொல்றத நீ செஞ்சா... உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு'!.. பண்ட் கரியரை மாற்றப் போகும் கவாஸ்கரின் ப்ளான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பண்ட்-இன் கேப்டன்சி குறித்து தொடர்ந்து எழுந்துவந்த பேச்சுக்களுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார், ரிஷப் பண்ட். கடந்த 2 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதால் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மொத்தம் 8 போட்டிகளில் ஆடிய அந்த அணி 6 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இளம் வீரரான ரிஷப் பண்ட் எப்படி அணியை கையாளப்போகிறார், அவருக்கு என்ன தகுதி உள்ளது என எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும் ரிஷப் பண்ட் பதிலடி கொடுத்தார்.

தொடரில் தோனி மற்றும் விராட் கோலியின் அணிகள் இருந்த போதும் அவற்றை அடித்து நொறுக்கிவிட்டு புள்ளிப்பட்டியலில் டாப்பில் உட்கார்ந்தது டெல்லி அணி.  இந்நிலையில், பண்ட்-இன் கேப்டன்சி குறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வருவார் என தெரிவித்துள்ளார்.

6 போட்டிகளுக்கு மேல் அவரின் கேப்டன்சியை பார்த்தபோதும், பண்ட்-இடம் தொடர்ந்து கேப்டன்சி குறித்த கேள்விகளே கேட்கப்பட்டது. போட்டிக்கு பின்னர் தொகுப்பாளர்கள் அதனை பற்றியே கேட்டது, அவருக்கு சோர்வை ஏற்படுத்தியது.  ரிஷப் பண்ட் கேப்டன்சியில் சில தவறுகள் செய்தார் தான். ஆனால் எந்த கேப்டன் தான் தவறு செய்யவில்லை.

இந்த ஐபிஎல்-ல் அவர் காட்டியது சாதாரண தீ பொறி தான். அவரின் போக்கிலேயே விட்டுவிட்டால் அது ஒருநாள் பெரும் தீயாக மாறும். அவர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள தகுதியானவர். தனக்கென தனி திட்டங்களை வகுத்து அதன்படி அணியை வழிநடத்தி செல்கிறார். 

இந்திய அணியின் எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக அவர் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இந்த தொடரில் அவர் அப்படி ஒரு திறமையை வெளிப்படுத்தினார். அவர் தனது மனநிலையையும் பொறுமையையும் சரியாக கடைபிடித்தால் மிகப்பெரும் வாய்ப்புகள் அவருக்கு உள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்