'இதுக்கு மேல நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க'!?.. கொந்தளிக்கும் அமித் மிஸ்ரா!.. இந்திய அணியில் ஓரவஞ்சனையா?.. ஐபிஎல்லில் என்ன நடக்கிறது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் குறித்தும், தன்னுடைய கிரிக்கெட் கரியர் குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராகடந்த சீசனில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடிய மிஸ்ரா காயம் காரணமாக இடையிலேயே விலகினார்.
இதற்கிடையே டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் தன்னை பல விதங்களில் மேம்படுத்தி கொண்டுள்ளதாக மிஸ்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா 3 போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து விலகினார். கடந்த தொடரில் ஐபிஎல்லின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (170) லசித் மலிங்காவின் சாதனையை முறியடிக்க அவருக்கு வாய்ப்பு இருந்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி அவர் இதுவரை 160க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், கடந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர் என்ற சாதனையை தவறவிட்டுள்ளார். அந்த சாதனையை இந்த சீசனில் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். மேலும், கடுமையான போட்டி கொண்ட ஐபிஎல்லிலேயே, தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் என்றும், இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் ஆவேசப்பட்டார்.
இந்நிலையில், தான் மீண்டும் இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு திறனுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன விமர்சத்தாலும் அதைத் தான் கண்டுகொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டில் தனது அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி விளையாடிய நிலையில், தான் அணியில் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கென தான் 13 வருடங்கள் காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ரிஷப் பந்த் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது குறித்து மகழ்ச்சி தெரிவித்துள்ளார். ரிஷப்புடன் தனக்கு சிறப்பான புரிதல் உள்ளதாகவும், அவர் கடந்த 4 -5 மாதங்களில் தன்னுடைய போட்டி மற்றும் பிட்னசை சிறப்பான வகையில் மாற்றிக் கொண்டுள்ளதாகவும் மிஸ்ரா மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நான் ஒன்னும் பெரிய பவர் ஹிட்டர் கிடையாது’!.. ‘ஆனா அவங்க ரெண்டு பேர்கிட்ட கத்துக்க ஆசைப்படுறேன்’.. புஜாரா ஓபன் டாக்..!
- இந்தியாவின் முதல் ‘பெண்’ கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்.. கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்..!
- VIDEO: இனி அவருக்கு 'இப்படி' ஒரு சான்ஸ் கிடைக்குமா...? டி காக்-ன் 'வேற லெவல்' தந்திரம்...! 'பின்னாடி திரும்பி பார்த்திட்டே ஸ்ட்ரைக்கர் என்ட் நோக்கி ஓடி வந்தவருக்கு...' - முன்னாடி காத்திருந்த அதிர்ச்சி...!
- ‘இப்போ அவரு செம ஃபிட்’!.. முதல் மேட்ச்லையே அவரை பார்ப்பீங்க.. வெளியான ‘சூப்பர்’ அப்டேட்..!
- ‘சொல்ல வார்த்தையே வரல’!.. காரை பரிசாக வாங்க அம்மாவையும், அண்ணனையும் அனுப்பிய இளம்வீரர்.. இன்ஸ்டாகிராமில் உருக்கம்..!
- ‘இன்னும் 5 நாள்தான் இருக்கு, அதுக்குள்ள RCB-க்கு வந்த சிக்கல்’!.. தீவிர ஆலோசனையில் கேப்டன் கோலி..!
- ‘கொல்லிமலை Trip’!.. இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு ‘Caption’ போட்டு மறுபடியும் மனசை வென்ற நட்டு..!
- 'யோவ்... என்னை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே'!?.. ஜாலிக்கு வீடியோ போட்ட வார்னர்... ஜோலியை முடித்துவிட்ட ரோகித்'!.. ஏன்ணே இப்படி?
- 'யாரு கண்ணு பட்டுச்சோ... சென்னை அணிக்கு அடி மேல அடி விழுது!.. ரசிகர்களை கலக்கமடையச் செய்த சம்பவம்'!.. 'போன வருஷமே நிறைய இழுந்துட்டோம்'!
- 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே'!.. 'ஹசல்வுட் விலகல்... பவுலருக்கு பதிலாக பேட்ஸ்மேனை இறக்க சிஎஸ்கே அதிரடி வியூகம்'!.. வாயடைத்துப் போன கிரிக்கெட் விமர்சகர்கள்!