ராஜஸ்தான் ராயல்ஸ் vs சிஎஸ்கே!.. மேட்ச் தொடங்கும் முன்பே அடுத்த சோதனையா?.. பிசிசிஐ முடிவால்... நொறுங்கிப் போன ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சீசனில் ப்ளே-ஆப்பிற்கு முன்னேறாமல் சிஎஸ்கே அணி வெளிவந்தது. ஆனால் முதலில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பே அந்த அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தாக்கத்தில் சிஎஸ்கே அணி சிக்கியுள்ளது. அந்த அணியின் பௌலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மட்டுமின்றி சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலான போட்டி கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவுள்ள நிலையில் நாளைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் பௌலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா பாதித்துள்ளதையடுத்து இந்த சிக்கல் நிலவுகிறது.
பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான நாளைய போட்டியும் ஒத்திவைக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆனால், டெல்லியில் நடைபெறவுள்ள இன்றைய எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்றும், பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஎஸ்கேவின் பயிற்சி முகாமும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த போட்டியில் டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதியது. நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருந்த நிலையில், தற்போது கோச்சுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பையடுத்து அணி வீரர்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி காலை முதல் மதியம் வரை மட்டுமே அனுமதி’!.. தமிழகத்தில் ‘புதிய’ கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு.. முழு விவரம்..!
- 'இருக்கா?.. இல்லையா?.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க'!.. சிஎஸ்கேவின் கொரோனா ரிப்போர்ட் குறித்து... அடுத்தடுத்து திருப்பங்கள்!.. ரசிகர்கள் குழப்பம்!!
- 'இந்தியாவில் இருந்து தப்பிக்க... புது ரூட்டை கண்டுபிடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்'!.. அடுத்து காத்திருந்த ட்விஸ்ட்!.. ஐபிஎல்லுக்கு இப்படி ஒரு நிலைமையா?
- ஏங்க 'அவரு' ஃபார்ம் அவுட்லாம் ஆகலங்க...! 'அன்னைக்கு அங்க என்ன நடந்துச்சுன்னா...' - சிஸ்கே வீரர் குறித்து பிளெமிங் கருத்து...!
- 'போச்சு!.. வார்னரைப் போலவே கேப்டன் பதவியை... இழக்கப் போகும் மற்றொரு வீரர்'!?.. தீவிர கண்காணிப்பு!.. பதவிய காப்பத்திக்க வழி இருக்கா?
- 'எத்தனையோ பேட்ஸ்மேன பார்த்தாச்சு...' ஆனா 'யார்கிட்டையும்' இல்லாத ஒண்ணு 'இவருகிட்ட' இருக்கு...! - டெல்லி அணி வீரரை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்...!
- 'நாடு இருக்குற நெலமைக்கு... ஐபிஎல் ரொம்ப முக்கியமா'?.. கிரிக்கெட் வீரர்கள் பதற்றம்!.. 'ரத்து செய்யப்படுகிறதா ஐபிஎல்'?.. பிசிசிஐ தீவிர ஆலோசனை!
- 'கொல்கத்தா' அணியைத் தொடர்ந்து.. 'சிஎஸ்கே'வுக்கு வந்த 'சிக்கல்'??.. 'ஐபிஎல்' வட்டாரத்தில் 'பரபரப்பு'!! என்னதான்’யா நடக்குது??
- ‘உங்களை இப்படி பார்க்க முடியல’!.. நொறுங்கிப் போன ரசிகர்கள்.. வார்னருக்காக ‘குரல்’ கொடுத்த முன்னாள் வீரர்..!
- "முடிந்தது டேவிட் வார்னரின் அத்தியாயம்!.. ஒரே நாளில் புரட்டிப்போட்ட அந்த ஒரு சம்பவம்"!.. ஸ்டெயின் வெளியிட்ட அதிரவைக்கும் தகவல்கள்!